Thursday, June 10, 2010

திருவள்ளுவர் கண்ட திருநடனம்,

திருவள்ளுவர் கண்ட திருநடனம் &
திருவள்ளுவர் இயற்றிய மற்றும் ஒரு நூல்

திருக்குறள்.
உலகப் பொதுமறை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட, இரண்டு அடியில் சொல்லப்பட்ட திருக்குறளில் உலக நடப்புகள் அனைத்தையும் முக்காலத்திற்கும் தகுந்த முறையில் இயற்றப்பட்ட தமிழ் மொழியின் மணிமகுடத்தின் மாணிக்கம் போன்றது.
தமிழிலிருந்து அதிக முறை மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.
மிக அதிகமான உரைகள் எழுதப்பட்டதும் திருக்குறளுக்குத் தான்.
நீதி நூலான திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்கள் ஏதுமில்லை.
பொதுவாக தமிழகத்தில் காலம் காலமாக பக்தி இலக்கியங்களே (தேவாரம் போன்றவை) எளிய மக்களிடம் எளிதாகச் சென்றடைந்துள்ளன.
நீதி நூல்களில் திருக்குறள் மட்டுமே மிக அதிக அளவில் மக்களைச் சென்றடைந்தமைக்கு அதன் எளிய வடிவமைப்பு, அளவிற்கடந்த பொருள் நயம் போன்றவை.
திருக்குறளின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவப் பெருந்தகை.
திருவள்ளுவரைப் பற்றி தமிழ் நாவலர் சரிதையிலும் மற்றும் பல நூல்களிலும் காணக் கிடைக்கப் பெறுகின்றது.
இவர் மயில் ஆர்க்கும் புரம் ஆகிய, அம்பிகை மயிலாக வந்து சிவபூஜை செய்த ஸ்தலமாகிய கபாலீஸ்வரர் ஆலயம் அமைந்த மைலாப்பூரில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது.
ஒரு சமயம், அம்பிகை சிவபெருமானின் ஆடல் திறனை முழுமையாகக் காண உள்ளார்ந்த மன விருப்பம் கொண்டு, அகில உலகும் அலகிலா நாயகனின் ஆடலைக் காணத் திருவுள்ளம் கொண்டு, போட்டி நடனம் ஆட, சிவபெருமானை அழைக்கின்றாள்.
ஆடல் கலைக்கே நாயகனாகிய ஈசன் அந்தப் போட்டியை மனம் விரும்பி ஏற்கின்றார். அம்பிகைக்கும், அரனுக்கும் போட்டி நடனம் தொடங்குகின்றது. ஜகன்மாதாவாகிய அம்பிகையும் ஆடல் கலைக்கே உரித்தானவள்.
தாண்டவம் என்றால் ஆண்கள் ஆடுவது. லாஸ்யம் என்றால் பெண்கள் ஆடுவது.
இருவரின் நடனமும் மிக மும்முரமாக நடக்கின்றது. ஈசனின் ஒவ்வொரு பா(ba)த்திற்கும் அம்பிகை பதில் பா(ba)வம் அளிக்கின்றாள். சரிசமமாக இருவரும் ஆடிக்கொண்டேயிருக்கின்றார்கள்.
இதற்கு ஒரு முடிவே இல்லையா என அனைவரும் ஐயுறும்போது, இந்தப் போட்டி நடனத்திற்கு முடிவாக, முடிவில்லா நாயகனின் காதில் உள்ள குண்டலம் (குழை) ஆட்ட வேகத்தில் கீழே விழுகின்றது.
அந்தக் குண்டலத்தை நாட்டியம் ஆடும் விதத்திலேயே வலது காலால் அந்தக் குண்டலத்தை கீழேயிருந்து எடுத்து, அதை தன் நாவினால் ஈரப்படுத்தி, அந்த வலது காலினாலேயே வலது காது வரை காலைக் கொண்டுவந்து, தன் வலது காதில் குண்டலத்தைப் பொருத்திக்கொள்கின்றார்.
லாஸ்ய நாட்டிய சாஸ்திரப்படி காலைத் தலை வரையில் கொண்டு வர இயலாத அம்பிகை, ஈசன் செய்தது போல் செய்யாமல், தன் தோல்வியை ஒப்புக்கொள்கின்றாள்.
ஈசன் ஆடிய இந்தத் திருநடனம் ஊர்த்வ தாண்டவம் எனப்படும். gymnastics போன்ற கடின பயிற்சி இருந்தால் மட்டுமே காலை காது வரை கொண்டு வர இயலும். இன்றளவும் ஊர்த்வ தாண்டவம் என்பது நாட்டியக் கலையின் உச்ச நிலை தாண்டவமாக இருக்கின்றது.
போட்டி நடந்த இடம், மயிலாப்பூர் அமைந்திருக்கும் சென்னைக்கு அருகாமையிலிருக்கும் திருவாலங்காடு எனும் ஸ்தலம். (காளிகா தாண்டவம்)
இந்தப் போட்டி நடனத்தை திருவள்ளுவரும், தேவர்களும் மற்றும் அனைவரும் கண்டிருந்திருக்கின்றார்கள்.
ஆயினும் இதன் விபரம் அறிய தேவர்கள் திருவள்ளுவரிடம் வந்து இந்த நாட்டியத்திற்கான காரணம் கேட்க, அதற்கு திருவள்ளுவர்,

"பூவிலயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவியளந்தோனும் தாமிருக்க - நாவில்
இழை நக்கி நூல் நெருடும் ஏழை அறிவனோ
குழை நக்கும் பிஞ்ஞகன் தன் கூத்து"

என்கின்றார்.

பூவில் அமர்ந்திருக்கக் கூடிய பிரம்மாவும்,
தேவர்களுக்கு எல்லாம் அதிபதியாக விளங்கக் கூடிய இந்திரனும்,
மாபலிச் சக்ரவர்த்திக்காக ஒரு காலை புவியிலும், மற்றொரு காலை ஆகாயத்திலும் அமைத்த மஹாவிஷ்ணுவும்,
இந்தத் தாண்டவத்தைக் கண்டிருக்க,
நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கும் இந்தக் கடையேன் எளியேன் அறியமுடியுமோ,
குழை எனும் குண்டலத்தை நக்கி காதில் அணிந்த, பினாகம் எனும் நாகத்தை அணிந்த ஆடலரசனின் நாட்டியக் கோலத்தை?
என்று மிகவும் பணிவுடன் கூறுகின்றார்.
தேவர்களே வந்து சந்தேகம் கேட்கும் அளவிற்கு அறிவாற்றல் படைத்தவர் திருவள்ளுவர் என்பது இப்பாடல் மூலம் தெளிவாகின்றது.
இந்தப் பாடல்,
திருவள்ளுவர் இயற்றிய ஞான வெட்டியான் எனும் நூலில் காணப்பெறுகின்றது.
ஞானவெட்டியான் சுமார் 1500 பாடல்கள் கொண்டது. திருக்குறளைப் போல் இரண்டு அடியாக இல்லாமல் நான்கடி பாடல்களைக் கொண்டது.
திருவள்ளுவர் ஒரு புலவர் போல் அல்லாமல் சித்தர் வழியில் நின்று யோக சாஸ்திரத்தையும் உரைக்கும் நூலாக ஞானவெட்டியான் கருதப்படுகின்றது.
வெட்டியான் என்றால் காப்பவன், பாதுகாவலன் என்று பொருள்.
அருள் தரும் ஞானத்தை, வெளியேறாமல் காக்கக் கூடியது என்பது ஞானவெட்டியானின் உட்கருத்து.

திருவாலங்காட்டில் உள்ள ரத்ன சபையில் இந்தப் போட்டி நடனம் நடந்ததாக, அந்த ஸ்தல புராணம் கூறுகின்றது.
சிதம்பரத்திலும் இந்த நடனம் நடைபெற்றதாக தில்லை வன மஹாத்மியம் தெரிவிக்கின்றது.
ஒரு சமயம், கயிலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே உரையாடல் நடக்கும் போது, பொன்னார் மேனியனாக விளங்கும் வடகயிலைநாதன், தென்மதுரைவாழ் அம்பிகையை "காலீ" - கரிய நிறத்தினள் என்று கிண்டல் செய்கின்றார். கோபம் கொண்ட அம்பிகை அதே கரிய வடிவத்தோடு சிதம்பரம் வந்து தில்லை வனத்தைக் காளியாக நின்று காக்கின்றாள்.
தில்லை வனத்தைப் பாதுகாத்த அம்பிகையான காளியுடன் நடராஜர் போட்டி நடனமாடுகின்றார்.
காளி தான் தோற்றதால், வெகுண்டு, சிதம்பரத்தின் வட எல்லையில் கோபத்துடன் அமர, அக்கோலமே இப்பொழுதும் நாம் காணும் "தில்லைக் காளி" வடிவம்.
பிறகு பிரம்மா முதற்கொண்டு அனைவரும் காளியை சாந்தப்படுத்திய பின், அருள்தரும் வடிவமாக, வேதநாயகியாக, நான்கு தலைகளுடன், பொன்நிற தேகம் கொண்டு அமர்ந்த வடிவமே, அதே ஆலயத்தில் அமைந்திருக்கும் "பிரம்ம சாமுண்டி" எனும் "தில்லை அம்மன்" வடிவம்.

தில்லைக் காளியைப் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. வரப்ரஸாதியாக விளங்குபவள். கஷ்டங்களை நீக்குபவள். ஜெயத்தை வழங்குபவள்.

ஞானவெட்டியான் எனும் நூலில், திருவள்ளுவ நாயனாரின் சரித்திரச் சுருக்கத்தில், ஏலேலசிங்கர், வாசுகி போன்றவர்களுடன் திருவள்ளுவ நாயனார் நிகழ்த்திய அற்புதங்கள் உரைக்கப்படுகின்றது.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- 94434 79572
- mailto:yanthralaya@yahoo.co.in
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம்,
வியதீபாத தரிசனம்,
மார்கழி மஹோத்ஸவம்,
காசி யாத்திரை,
ஆழ்வார்கள் அருளிய அமுதம்,
தியாகராஜர் ஆராதனை,
சாளக்ராம வழிபாடு,
கூடாரைவல்லி,
நால்வர் காட்டிய நல்வழி,
சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்,
கவிக்கோ(ர்) காளமேகம்,
அதிசய அற்புத பாடல்கள்,
பாம்பு இயற்றிய பாடல்,
நடராஜ பத்து,
திருப்பல்லாண்டு,
மஹா சிவராத்திரி,
வசந்த நவராத்திரி,
நவாவரண பூஜை,
கதம்பம்,
கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?), கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை), கலிதோஷத்தினை நீக்கிய கணிதம் (கால கணிதம் - 4), மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5 - மோட்ச தீபம்),
கால கணிதம் (1,2,3,4 & 5)

9 comments:

neyvelivichu.blogspot.com said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

தொடர்ந்து எழுதுங்கள் .. ஒரு சிறிய சந்தேகம்

" மயிலாப்பூருக்கு அருகாமையிலிருக்கும் திருவாலங்காடு எனும் ஸ்தலம். (காளிகா தாண்டவம்)"

மைலாப்பூர் ஆ மயிலாடுதுறையா

அனுடன்
விச்சு

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் திருவாலங்காடு தலம் உள்ளது
சென்னைக்கு அருகாமை என்று எழுதியிருக்க வேண்டும். பழைய சென்னையாகிய மயிலாப்பூருக்கு அருகில் என்று எழுதிவிட்டேன்.

Geetha Sambasivam said...

நினைச்சேன், மயிலாப்பூருக்கு அருகேனு எழுதி இருக்கீங்களேனு. இப்போவும் திருத்திடலாம். திருவாலங்காட்டுக்குப் போயிருக்கேன் ஒரே முறை.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

திருவள்ளுவர் - மயிலாப்பூர் - திருவாலங்காடு என்று மூன்றிற்கும் ஒரு தொடர்பு வேண்டுமே என்றுதான், மயிலாப்பூர் அருகில் உள்ள திருவாலங்காடு என்று எழுதினேன். சென்னை என்றே எழுதியிருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது. பதிவிலேயே மாற்றிவிடுகின்றேன்.
நன்றி.

Sivamjothi said...


http://sagakalvi.blogspot.in/2014/07/pdf_25.html

ஞான நூல்கள் - PDF
மெய் ஞானம் என்றால் என்ன?
இறைவன் திருவடி எங்கு உள்ளது?
ஞானம் பெற வழி என்ன?
வினை திரை எங்கு உள்ளது?
வினை நம் உடலில் எங்கு உள்ளது?
வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
சும்மா இரு - இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
மனம் எங்கு உள்ளது?

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை படித்து தெளிவு பெறவும்

திருஅருட்பாமாலை 3 -- PDF
திருஅருட்பாமாலை 2 -- PDF
திருவாசக மாலை -- PDF
திருஅருட்பாமாலை 1 -- PDF
ஞானக்கடல் பீர் முகமது -- PDF
மூவர் உணர்ந்த முக்கண் -- PDF
ஞானம் பெற விழி -- PDF
மந்திர மணிமாலை(திருமந்திரம்) -- PDF
கண்மணிமாலை -- PDF
அருள் மணிமாலை -- PDF
சாகாக்கல்வி - PDF
வள்ளல் யார் - PDF
உலக குரு – வள்ளலார் - PDF
திருஅருட்பா நாலாஞ்சாறு
சனாதன தர்மம்
பரம பதம் - எட்டு எழுத்து மந்திரம் அ
ஜோதி ஐக்கு அந்தாதி
அகர உகர மாலை
ஞான மணிமாலை
ஆன்மநேய ஒருமைப்பாடு
ஜீவகாருண்யம்
ஸ்ரீ பகவதி அந்தாதி
அஷ்டமணிமாலை
திருஅருட்பா தேன்

Anonymous said...

ஊர்த்துவ தாண்அவமும், காளிகா தாண்டவமும் ஒன்றுதானா? வெவ்வேறா?

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

காளிகா தாண்டவம் என்பது காளியும் நடராஜரும் ஆடியருளிய போட்டி நடனம். அதன் உச்சகட்ட நிகழ்வே ஊர்த்வ தாண்டவம்.

Chidambaram Venkatesa Deekshithar said...

"திருவள்ளுவர் கண்ட திருநடனம்," திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் "வாலறிவன் நற்றாள்" , மாணடி சேர்ந்தார் , வேண்டாமை இலான் அடி, தாள் சேர்ந்தார்க்கு ,எண்குணத்தான் தாளை , இறைவனடி சேராதார் ,என்று ஆடல்வல்லானின் திருநடனத்தைக் கண்டே பாடியுள்ளார். என்பதே பொருந்தும்.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

நல்ல கருத்து.