&
ஸ்ரீ நடராஜர் பஞ்சரத்ன கீர்த்தனை
ஸ்ரீ நடராஜர் பஞ்சரத்ன கீர்த்தனை
கர்நாடக சங்கீத உலகத்திற்கு அளப்பரிய கீர்த்தனைகளை அளித்தவர் திருவையாற்றில் வாழ்ந்த ஸ்ரீ தியாக ப்ரும்மம்.
ஸ்ரீ ராமனையே பதிபக்தியாக, ஸ்ரீ ராமனையே தன் அனைத்து சாகித்யங்களிலும் பாடிய, ஸ்ரீ ராமனின் உருவத்தையே அனைத்து தெய்வங்களிலும் பக்தியுடன் பரவிய ஸ்ரீ தியாகராஜரின் 174 வது ஆராதனை திருவையாற்றில் நடைபெறுகின்றது.
பா(ba)வங்கள் நிறைந்த அவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பரந்த வெளியில் அனைவரும் அந்தப் பரமனையே மனதில் கொண்டு பாடி கானாஞ்சலி செய்வதைக் காண்பது மனதைக் கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும்.
பஞ்சரத்ன கீர்த்தனைகளில் முதலாவதாக வருவது ஜகதானந்த காரக எனத் தொடங்கும் பாடல். அவரின் பாடல்கள் தெலுங்கில் இருந்தாலும், இந்த முதல் கீர்த்தனை மட்டும் மிக விசேஷம் வாய்ந்தது.
பஞ்சரத்ன கீர்த்தனைகளில் முதலாவதாக வருவது ஜகதானந்த காரக எனத் தொடங்கும் பாடல். அவரின் பாடல்கள் தெலுங்கில் இருந்தாலும், இந்த முதல் கீர்த்தனை மட்டும் மிக விசேஷம் வாய்ந்தது.
ஜகதானந்த காரக என்ற பாடலை ஸ்ரீ ராமரின் நூற்றியெட்டு (அஷ்டோத்தர சதநாமாவளியாக) நாமாவளியாகப் பிரித்து அர்ச்ச்னை செய்யும் வகையில் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஜகதானந்த காரகாவைக் கேட்க இந்த தளத்திற்குச் செல்லுங்கள் : http://www.youtube.com/watch?v=UNMAlFx-fDs
தியாகப்பிரம்ம ஸ்ரீராம அஷ்டோத்தர சதநாமாவளி :
ஓம் ஜகதானந்த காரகாய நம:
ஓம் ஜயஜானகீ ப்ராண நாயகாய நம:, ககனாதிபாய, ஸத்குலஜாய, ராஜராஜேஸ்வராய, ஸ¤குணாகராய, ஸுரஸேவ்யாய, பவ்யாய, தாயகாய, ஸதாஸகல அமர தாரகாய, நிசயாய, குமுதாய, ஹிதாய, பரிபூர்ணாய, அநகாய, ஸ¤ராஸ¤ர பூஜிதாய, பயோதிவாஸஹாரணாய, ஸுந்தராய, தராய, வதனஸ¤தாமயாய, வஸோ --, ப்ருந்தாய, கோவிந்தாஸனாய, ஆனந்தமயாய, அவராப்ஜராப்த சுபகராய, அனேக நிகமாய, நீரஜாய, அம்ருதஜாய, போஷ்காய, நிமிஷ வைரிவாரித மீரணாய, கக துரங்காய, ஸத்கவி ஹ்ருதாலயாய, கணித வானர அனங்க அங்கத ஆங்க்ரியுகாய, இந்திர நீலமணினே, ஸந்நிபா பகனாய,
சந்த்ர ஸ¥ர்ய நயனாய, அப்ரமேயாய, வாகீந்த்ராய, ஜனகஸகலேசாய, சுப்ராய, நாகேந்த்ர சயனாய, சமனவைரி ஸன்னுதாய, பாதவிஜிதாய, மௌனினே, சாப ஸவ பரிபாலகாய, வரமந்தர க்ரஹணாய, லோலாய, பரமசாந்தாய, ஸித்தாய, ஜனகஜாதிபாய, ஸரோஜாய, பவாய, வரதாய, அகிலாய, ஸ்ருஷ்டி ஸ்தித் அந்தகாரிணே, காமிதாய, காமத பலதாய, ஸமானாய, காத்ராய, சசீபதயே, அனுதாப்தினே, மதஹராய, அனுராகாய, ராகாய, ராஜிதாய, கதாஸாராய, ஹிதாய, ஸஜ்ஜன மானஸாய, ஆப்தினே, ஸ¤தாகராய ..............
ஸ¤தாகர குஸ¤ம விமான ஸ¤ர ஸா ரிபு கராப்ஜ லாலித சரணாவ குணா ஸ¤ரகண மதஹரண ஸனாதனா ஜனுத
ஓங்கார பஞ்சர கீர புரஹப்ஸரோஜ பவ கேசவாதிரூப வாஸ்வரிபு ஜனகாந்தக கலாதர கலாதராப்த க்ருணா கல சரணாகத ஜன பால ந ஸ¤மனோஹ ரமண நிர்விகார நிகமஸாரதர
கரக்ருத சரஜால அஸ¤ர மத அபஹரண ஆவனீ ஸ¤ராஸ¤ரவனகவீ நபில ஜ மௌனிக்ருத சரித்ர, ஸன்னித ஸ்ரீ த்யாகராஜ நுத
புராண புருஷ ந்ருவ ராத்த ஜாச் ரித பராதீனகர விராத ராவண விராவணா நக பராசர மனோஹரா விக்ருத த்யாகராஜ ஸன்னுத
அகணித குண கனக சேல ஸால விதள நாருணாபஸ மாந சரனா பார மஹிமாத்புத ஸ¤க விஜந ஹ்ருத் ஸதந ஸ¤ர முனி கண விஹித தகில ச நீர நிதிஜா ரமண பாப கஜ ந்ருஸிம்ம வர த்யாகராஜாதி நுத
கோபாலகிருஷ்ண பாரதி பஞ்சரத்ன கீர்த்தனைகள்:
சங்கீத மூவர் தியாகப்ரும்மம், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் என்பது போல தமிழ் மூவர் மிகவும் பிரபலம்.
அவர்கள் : கோபால கிருஷ்ணபாரதி, மாரிமுத்தாப் பிள்ளை மற்றும் அருணாசல கவியார். ஜகதானந்த காரகாவைக் கேட்க இந்த தளத்திற்குச் செல்லுங்கள் : http://www.youtube.com/watch?v=UNMAlFx-fDs
தியாகப்பிரம்ம ஸ்ரீராம அஷ்டோத்தர சதநாமாவளி :
ஓம் ஜகதானந்த காரகாய நம:
ஓம் ஜயஜானகீ ப்ராண நாயகாய நம:, ககனாதிபாய, ஸத்குலஜாய, ராஜராஜேஸ்வராய, ஸ¤குணாகராய, ஸுரஸேவ்யாய, பவ்யாய, தாயகாய, ஸதாஸகல அமர தாரகாய, நிசயாய, குமுதாய, ஹிதாய, பரிபூர்ணாய, அநகாய, ஸ¤ராஸ¤ர பூஜிதாய, பயோதிவாஸஹாரணாய, ஸுந்தராய, தராய, வதனஸ¤தாமயாய, வஸோ --, ப்ருந்தாய, கோவிந்தாஸனாய, ஆனந்தமயாய, அவராப்ஜராப்த சுபகராய, அனேக நிகமாய, நீரஜாய, அம்ருதஜாய, போஷ்காய, நிமிஷ வைரிவாரித மீரணாய, கக துரங்காய, ஸத்கவி ஹ்ருதாலயாய, கணித வானர அனங்க அங்கத ஆங்க்ரியுகாய, இந்திர நீலமணினே, ஸந்நிபா பகனாய,
சந்த்ர ஸ¥ர்ய நயனாய, அப்ரமேயாய, வாகீந்த்ராய, ஜனகஸகலேசாய, சுப்ராய, நாகேந்த்ர சயனாய, சமனவைரி ஸன்னுதாய, பாதவிஜிதாய, மௌனினே, சாப ஸவ பரிபாலகாய, வரமந்தர க்ரஹணாய, லோலாய, பரமசாந்தாய, ஸித்தாய, ஜனகஜாதிபாய, ஸரோஜாய, பவாய, வரதாய, அகிலாய, ஸ்ருஷ்டி ஸ்தித் அந்தகாரிணே, காமிதாய, காமத பலதாய, ஸமானாய, காத்ராய, சசீபதயே, அனுதாப்தினே, மதஹராய, அனுராகாய, ராகாய, ராஜிதாய, கதாஸாராய, ஹிதாய, ஸஜ்ஜன மானஸாய, ஆப்தினே, ஸ¤தாகராய ..............
ஸ¤தாகர குஸ¤ம விமான ஸ¤ர ஸா ரிபு கராப்ஜ லாலித சரணாவ குணா ஸ¤ரகண மதஹரண ஸனாதனா ஜனுத
ஓங்கார பஞ்சர கீர புரஹப்ஸரோஜ பவ கேசவாதிரூப வாஸ்வரிபு ஜனகாந்தக கலாதர கலாதராப்த க்ருணா கல சரணாகத ஜன பால ந ஸ¤மனோஹ ரமண நிர்விகார நிகமஸாரதர
கரக்ருத சரஜால அஸ¤ர மத அபஹரண ஆவனீ ஸ¤ராஸ¤ரவனகவீ நபில ஜ மௌனிக்ருத சரித்ர, ஸன்னித ஸ்ரீ த்யாகராஜ நுத
புராண புருஷ ந்ருவ ராத்த ஜாச் ரித பராதீனகர விராத ராவண விராவணா நக பராசர மனோஹரா விக்ருத த்யாகராஜ ஸன்னுத
அகணித குண கனக சேல ஸால விதள நாருணாபஸ மாந சரனா பார மஹிமாத்புத ஸ¤க விஜந ஹ்ருத் ஸதந ஸ¤ர முனி கண விஹித தகில ச நீர நிதிஜா ரமண பாப கஜ ந்ருஸிம்ம வர த்யாகராஜாதி நுத
கோபாலகிருஷ்ண பாரதி பஞ்சரத்ன கீர்த்தனைகள்:

தமிழ் மூவரில் முதலாமவர் கோபாலகிருஷ்ண பாரதி. இவர் தியாக ப்ரும்மத்தோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்.
தியாகப்ரும்மம் ஸ்ரீ ராமரின் மேல் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடியதைக் கேட்டு, கோபால கிருஷ்ண பாரதி சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மேல் பஞ்சரத்ன கீர்த்தனைகளை எழுதியுள்ளார்.
ஸ்ரீ தியாகப்ரும்மம் பாடியது போலவே அதே ராகங்களோடு அமைந்தது கோபால கிருஷ்ண பாரதியின் பஞ்சரத்ன பாடல்கள்.
இருவரும் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் பற்றியும், இருவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பற்றியும் பிறகொரு பதிவில் எழுதுகின்றேன்.
*****
தமிழில் பஞ்சரத்ன கீர்த்தனை- கோபால கிருஷ்ண பாரதி
ராகம் : நாட்டைஹர ஹர சிவ சங்கர கருணாகர பரமேஸ்வரா
ஆனந்தத் தாண்டவராயா (ஹர ஹர)
புரஹர வ்ருஷ பத்வஜ பரிபூரண காமா (ஹர ஹர)
பரமானந்த கூபமும் பஞ்சாட்சர படியும் கோடியும்
வரமருள் சன்னிதியும் சிவகாமியும் மதிலும்
பரவிடும் கோபாலகிருஷ்ணன் பாடிய குஞ்சிதபாதமும்
தரிசனம் பண்ணித் தெளிந்திடாத ஜன்மம் மனித ஜென்மம் அல்ல (ஹர)
**************
ராகம் : கௌளை
சரணாகதியென்று நம்பிவந்தேன் - உன்றன்
சரணங்களையுன் தா
கருணாகடாட்சம் பண்ணவேணுந் தில்லைக்
கனக சபையில் ஆடும் பிரவுவல்லவோ
ஜனனாதி பயங்கள் அணுகாமல் உன்றன்
சிவசாயுஜ்ய பதம் தருதல் வேண்டும்
மனனாதிகள் அறியேன் தவம் புரியேன்
மாயன் கிருஷ்ணன் பணிந்திடும் உன் திருவடியைச் (சரணாகதியென்று)
****************
ராகம் : ஆரபி
பிறவாத வரந்தாரு என்னையா
பிறவாத வரந்தாரும்
அறிவுடையோர் தொழுதேத்திய தில்லைப்பொன்
னம்பலவா இன்னம்பல யோனியில் [பிறவா]
எண்பத்து நாலு லட்சம் ராசிகளில்
எடுத்தெ டுத்துப் பிறந் திறந்ததோ
புண்பட்டதுபோதும் போதும் இனிமேல் புத்தி வந்ததையா
நண்பற்றிடு மனைவி மக்கள் வாழிவினில்
நாள்க டோறும் மனவி லாசங்களில்
இன்பத்துடன் கோபால கிருஷ்ணன் தொழு
தேத்திய சக தீசனே நடராசனே.
*******************
ராகம் : வராளி
ஆடிய பாதமே கதியென் றெங்கும்
தேடியும் காண்கிலேன் பதி அவன்
நாடு புகழ்ந்திடும் தில்லைச் சிதம்பர
நாதன் சபை துலங்க வேதகீதம் முழங்க
பக்தியே அருளென்று வரும் தாசன் - கோ
பால கிருஷ்ணன் தொழும் நட ராசன்
சக்தி சிவகாமி மகிழ்நேசன் - சர்வ
சாட்சியாய் நிறைந்திடும் ஜகதீசன்
வெற்றி பெருகிய மதனை வென்றவன்
வேட னெச்சிலை வாரி யுண்டவன்
அத்திமா லையை மார் பிற் கொண்டவன்
அஞ்செழுத்துருவாகி நின்றவன்.
*****************
ராகம் : ஸ்ரீ ராகம்
மறவாமல் எப்படியும் நினை மனமே
மன்னும் பொன்னம்பல மன்றுள் நடனம்
பிறவாமல் எப்படியும் வரந்தருவார்
பிசகில்லை பேணித் தொழுது
விரிவாகிய மறையோதின போதிலும் – இந்த
விஷய சம்சாரவலை பொல்லாது
மருவாமல் விடாது பிடிபடாது
மாயமயக்கம் தெளியாது
திருவாதிரைத் திருநாளில் மகிழ்ந்து
வீதிவலம் வந்து தேவர் சபை சென்று உள்ளன்
புருவாகிய கனகசபையில் நின்றுபாடிக்
கோபால கிருஷ்ணன் பணியும் திருவடியை (மறவாமல்)
மேற்கண்ட பாடல்களின் ஸ்வரக் குறிப்புகள் தேவைப்படுவோர் ஸ்ரீ உமா மகேஸ்வரன் அவர்களைத் தொடர்பு கொண்டு, ரூ.10/= செலுத்தி, புத்தகம் பெறலாம். Mail : sumaheswaran@gmail.com
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572
- Mail : yanthralaya@yahoo.co.in
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572
- Mail : yanthralaya@yahoo.co.in
www.facebook.com/deekshidhar
-
10 comments:
அருமையான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
அற்புதமான கட்டுரை.. மிக்க நன்றி..
நல்ல பதிவு.ரொம்ப நாளா புது பதிவே காணோமே
this is super composition and new way thank you
நல்லா இருக்கு, கோபால கிருஷ்ண பாகவதர் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதி இருக்கலாம். தியாகராஜர் பற்றித் தெரிந்த அளவுக்கு அவரைப்பற்றி அறிந்தவர்கள் குறைவு. பாடகர்கள் தவிர. :(
நன்றி.
to continue
தங்கள் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டவர்களில் ஒருவர் கோபாலகிருஷ்ண பாரதியாரை கோபாலகிருஷ்ண பாகவதர் என்று குறிப்பிட்டிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாகவதர் புதுக்கோட்டையில் வாழ்ந்த மகான். நாம சங்கீர்த்தனமும், நரசிம்ம ஜெயந்தி விழாவும் அவரால் பிரபலமடைந்தன. இரு வேறு துறைகளில் பிரபலமானவர்களைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. நந்தன் சரித்திரம் எழுதிய சீர்காழி கோபாலகிருஷ்ண பாரதியின் பல பாடல்கள் பிரபலமானவை. கோபாலகிருஷ்ண பாகவதர் நரசிம்ம ஜெயந்தி நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்து பெரும் புகழ் பெற்றவர். தங்கள் வலைத்தளம் நன்றாக இருக்கிறது.
@Thanjavooran, Thanks, but it was a careless mistake. I have no confusion between the two Mahans. கோபாலகிருஷ்ண பாகவதர், சஞ்சீவி பாகவதர் ஆகியோரைப்பற்றி ஓரளவுக்கு அறிவேன். இது அவசரத்தில் விளைந்த தவறு. ஏற்கெனவே கோபாலகிருஷ்ண பாரதியார் குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றில் உங்கள் பார்வைக்காகச் சுட்டி:
இங்கே
இங்கே
வேண்டாம்னு நினைச்சேன்; அப்புறமாக்கொடுக்கலாம்னு தோன்றியது. கொடுத்திருக்கேன். மன்னிக்கவும்.
thanks for sharing. புதுசா ஒண்ணும் எழுதலை போல! :(
கோபாலகிருஷ்ண பாரதியைக் குறித்த பகிர்வுக்கு நன்றி.
thanks for sharing.
Post a Comment