Wednesday, July 27, 2016

சிதம்பரம் ஆலயத்தில் லக்‌ஷ (1,00,000) ருத்ர ஜப பாராயணம்


சிதம்பரம் ஆலயத்தில் லக்‌ஷ (1,00,000) ருத்ர ஜப பாராயணம் 

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் முப்பெரும் விழா தொடக்கம் 

கோடி அர்ச்சனை, லக்ஷ ருத்ர ஜபம், லக்‌ஷ ஹோமம்.

கோடி அர்ச்சனை : 28.07.2016 – 15.09.2016

லக்‌ஷ ருத்ர ஜப பூர்த்தி, லக்‌ஷ ஹோமம்  & மஹாபிஷேகம் : 15.09.2016 


அன்புடையீர்,

கோயில் என்றாலே பொருள்படும் சிதம்பரத்தில் அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடும் ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனையும், லக்ஷ ருத்ர ஜபமும், லக்‌ஷ ஹோமமும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்‌ஷிதர்களின் மேலான வழிகாட்டுதலின் படி,  மிகச் சிறப்பாக மாபெரும் வைபவமாக  நடைபெறவுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் – இம்மூன்றாலும் சிறப்புற்ற தலம் – சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த தலம்.  உலக புருஷனின் இதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். தரிசிக்க முக்தி தரும், சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த,  பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த, வேண்டுவதை உடன் அருளும், மரண பயம் போக்கும் ஸ்தலம். 
சிவகங்கை எனும் தீர்த்தம் (குளம்) கோயிலினுள் அமைந்து கங்கைக்கு மேலான பலன்களை வழங்குகின்றது. 
ஸ்ரீ நடராஜ ராஜர் - அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்)  பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். வேதங்கள் போற்றும் வேதநாயகர். 

அர்ச்சனை பாட்டேயாகும் - என்பது தெய்வ சேக்கிழார் வாக்கு. இறைவனை வழிபடும் வகைகளில் மிக எளியதும், வரங்களை விரைவில் வழங்கக் கோருவதிலும், தோத்திரம் எனும் வகையில் தெய்வத்தினை போற்றிடும் சிறப்பு அம்சமாக அர்ச்சனை கருதப்படுகின்றது. பல்வேறு மலர்களாலும், இலைகளாலும் தெய்வத்தின் பாதங்களில் சேர்ப்பிக்கும் அர்ச்சனை அளவில்லாத பலன்களைத் தரக்கூடியது. 
அர்ச்சனையை எண்ணிக்கைகள் கொண்டு செய்வது வழக்கத்தில் உள்ளது. 16 தெய்வப் பெயர்களைக் கொண்டு செய்யப்படுவது ஷோடச நாமாவளி என்றும், 108 கொண்டு செய்வது சதநாமாவளி என்றும், 300 கொண்டு அர்ச்சிப்பது திரிசதி என்றும், 1008 கொண்டு வழிபடுவது ஸஹஸ்ரநாமம் என்றும் அழைக்கப்படும். 
இதில் ஸஹஸ்ரநாமாவளிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதிலும் நடராஜ ராஜரை துதிக்கும் நடேச ஸஹஸ்ரநாமம் பற்பல விசேஷங்கள் கொண்டது. 
இந்த ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு 100 முறை அர்ச்சித்தால் அது லக்‌ஷார்ச்சனை எனப்படும். 
கோடி அர்ச்சனை : காலை & மாலை இரு வேளைகளில் 50 நாட்களுக்கு  லக்‌ஷார்ச்சனை செய்தால் அது கோடி அர்ச்சனை என்ற கணக்கில் அமையும்.

லக்‌ஷ ருத்ர ஜபம் : 
நமது இந்து சனாதன மதத்திற்கு ஆதராமாக விளங்குவது ரிக், யஜுர், ஸாமம் மற்றும் அதர்வணம் எனும் நான்கு வேதங்கள். யஜுர் வேதத்தின் மையப்பகுதியாகவும்,  வேதத்தின் சாரமாகவும், சைவத்தின் மிக உயர் நிலை தெய்வமாக விளங்கும் சிவபெருமானையே முழுவதும் போற்றுவதும் ஆக திகழ்வது ஸ்ரீ ருத்ரம் எனும் மிகப் பலம் வாய்ந்த அற்புத பலன்கள் தரும் அரிய மந்திரத் தொகுப்பு. 
ஸ்ரீருத்ரம் - யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. 
சிவநேயர்களின் இறைகோஷமாக எப்பொழுதும் சொல்லப்படுதும், சைவத் திருமறைகள் அற்புதமாக போற்றுவதும் (நமசிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க) ஆகிய 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை தன்னுள் கொண்டது ஸ்ரீ ருத்ரம். (நமசிவாயச நமசிவாய)
ஸ்ரீருத்ரம் - ருத்ரோபநிடதம் என்றும் சதருத்ரீயம் என்றும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. வாழ்க்கை எனும் துயரக்கடலிருந்து நம்மை விடுவித்து முக்திக்கு கருவியானதால் இது உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வடிவங்களில் ஸ்ரீ ருத்திரனை இந்நூலில் போற்றப்படுவதாலும் இதனை சதருத்ரீயம் எனப்படுகிறது.
ஸ்ரீருத்ரத்தை ஜபம் செய்வதைக் கேட்பதால் கிடைக்கும் பயன் விரும்பிய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும். நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது. மேலும் ஸ்ரீ ருத்ரமே அனைத்து பாவங்களுக்கும் சிறந்த பரிகாரமாகவும் கூறப்பட்டுள்ளது.
இவையனைத்தும் ஒரு முறை ஸ்ரீ ருத்ர மந்திரத்தினைக் கேட்பதால் கிடைக்கும் பலனாகும். 
உலகிலேயே முதல் முறையாக, பிரபஞ்ச நாயகராக விளங்கும் ஸ்ரீ நடராஜ மூர்த்தி விளங்கும் தில்லைச் சிதம்பர ஆலயத்தில், 100 தீக்‌ஷிதர்கள் கொண்டு, 50 நாட்களில் - காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் - ஒரு லக்‌ஷம் முறை பாராயணம் செய்யப்படவுள்ளது. 

லக்‌ஷ ஹோமம் : ஒரே நேரத்தில் நூறு பூஜகர்கள் நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை (100x1000=1,00,000) ஹோமம் செய்வது லக்‌ஷ ஹோமம் ஆகும்.


மஹாபிஷேகம் : அபிஷேக பிரியரான நடராஜப் பெருமானுக்கு விபூதி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், இளநீர், சந்தனம், திரவியப்பொடி, மஞ்சள்தூள் முதலான பொருட்கள் கொண்டும், பல்வேறு புஷ்பங்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் செய்வது ஸகல திரவிய மஹாபிஷேகம் ஆகும். 

கோடி அர்ச்சனை : 28.07.2016 – 15.09.2016

லக்‌ஷ ஹோமம் & மஹாபிஷேகம் : 15.09.2016 

நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு,நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது, கற்ற கல்விக்கேற்ற உத்யோகம்,உத்யோக உயர்வு, வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி மற்றும் வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும் இந்த மஹா மஹா வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு, ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தியின் பரிபூரண அருளால் அனைத்து பயன்களையும் பெற வேண்டுகின்றோம்.

பக்தர்கள் அனைவரும் இந்த மாபெரும் காணுதற்கரிய இந்த மாபெரும் வைபவத்தினை தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறக் கோருகின்றோம். 

நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 9443479572, 9362609299.
Mail : yanthralaya@gmail.com
http://natarajadeekshidhar.blogspot.in
www.facebook.com/deekshidhar


தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

**************************************************
**************************************************
**************************************************

&




Tuesday, May 31, 2016

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் கொண்டு கோடி அர்ச்சனை

ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஸஹாயம்
ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் துணை


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுக்கா, 
கொல்லங்கோடு, புதுகிராமம்
ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம்
ஸ்ரீ லலிதாம்பிகா கோடி அர்ச்சனை 
மஹா வைபவம்
நாள்: ஸ்வஸ்திஸ்ரீ துர்முகி வருஷம், ஆடி மாதம் 1ம்தேதி-10ம் தேதி 
16.07.2016 25.07.2016
நேரம் : காலை 08.30 11.30 & மாலை 05.00 8.00
 -----------------------------------------------------------------------------------------------------
ஓம் ஸகுங்கும விலேபனாம் அலிகசும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்‌ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம்
அசேஷ ஜனமோஹிநீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸும பாஸுராம் ஜபவிதெள ஸ்மரேதம்பிகாம் ||

பக்த ஸ்ரேஷ்டர்களுக்கு,
பாரத புண்ய பூமியில் மஹரிஷிகள், மஹா சித்த புருஷர்கள் செய்த தவத்தின் பயனாக, தெய்வத் திருவருள் பொங்கிடும் வகையில் ஆலயங்கள் அமைத்து பக்தர்கள் யாவருக்கும் பலன் கிடைத்திட வழிவகை செய்தார்கள். தேவதா ஸான்னித்யம் பெருகிட சிறப்பான வழிபாட்டு முறையையும் வகுத்தார்கள்.

அவ்வகையில், கொல்லங்கோடு கிராமம், புதுகிராமம் ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஸ்வாமி - நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோயில் கொண்டு அமைந்து, கேரள ஆலயக் கலை அமைப்பில் அழகுற அமைந்து, சிவாகம முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வரும் அற்புத ஆலயம். கேரள மரபும், ஆகம மரபும் ஒரு சேர அமைந்திட்ட அதிசய ஆலயம். கங்கைக்கு நிகரான காயத்ரி ஆற்றங்கரையில் அமைந்த, காசிக்கு நிகரான புண்ணியங்களை நல்கும் அழகிய ஆலயம். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அளித்து, பக்தர்களின் இடர் நீக்கி, விபத்துக்களை விலக்கி, நோய்களை நீக்கி நீடித்த ஆயுள் அதிகரிக்க நல்கிடும் ஸ்ரீ விஸ்வநாதர் மிருத்யுஞ்சய லிங்கமாக அமைந்திட்ட நல்லதொரு ஆலயம். நல்ல இல்லற வாழ்வு, திருமண யோகங்கள், வம்ச அபிவிருந்தி அருளும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் விளங்கிடும் வியத்தகு ஆலயம். வருடந்தோறும் நியமங்களின்படி திருவிழாக்கள் சிறப்புற நடந்திடும் சீர்மிகு ஆலயம்.

இவ்வாலயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாந்த்ரீக ப்ரச்னம் பார்க்கையில், கோயிலும், கோயிலைச் சார்ந்த இடங்களும், ஆலயத்தைச் சேர்ந்த பக்தர்களும் மென்மேலும் வளங்களும் நலங்களும் பெருக,இயற்கை இடர்கள் நீங்கி உலக நன்மை பெருக, விவசாயம் செழித்து, மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு, அம்பிகைக்கு கோடி அர்ச்சனை செய்தல் நலம் என்ற தெய்வத் திருவாக்கு கிடைத்திட்டது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் தெய்வத் திருவருளால் மேற்கண்ட தேதியில் நடத்திட உத்தரவும் கிடைத்தது.

நூறு தில்லை வாழ் அந்தணர்கள் எனும் தீக்ஷித பெருமக்களால், லலிதா ஸஹஸ்ரநாமம் எனும் அம்பிகையின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி மங்கலப் பொருட்கள் கொண்டு அர்ச்சிப்பது (100x1000=1,00,000) ஒரு லக்ஷார்ச்சனை ஆகும். காலை ஐந்து முறை செய்வது ஐந்து லக்ஷ அர்ச்சனைக்கு ஈடாகும். மாலை ஐந்து முறை செய்வது ஐந்து லக்ஷார்ச்சனைக்கு சமமாகும். ஆக ஒரு நாளில் பத்து லக்ஷம் (10X1,00,000=10,00,000) முறை அர்ச்சனை செய்வது உத்தமம். பத்து தினங்களில், நாளொன்றுக்கு பத்து லக்ஷம் அர்ச்சனைகள் செய்வது (10X10,00,000=1,00,00,000) ஒரு கோடி அர்ச்சனை செய்திடுதலாகிவிடும். அம்பிகைக்கு ஒரு கோடி அர்ச்ச்னை செய்வது ஒரு மாபெரும் வைபவம். ஒரு அர்ச்சனை செய்தாலே பெரும் பலன்களை தந்திடும் அம்பிகை, ஒரு கோடி அர்ச்சனை செய்வதைக் காண்பது தேவியின் பரிபூரணமான அருளை பன்மடங்கு தந்திடும் என்பது நிதர்சனமான உண்மை.

லலிதா ஸஹஸ்ரநாமம் : அம்பிகையே அகில உலகிற்கும் காரணியாக விளங்குபவள் என்பதை பறைசாற்றும் சாக்த வழிபாட்டு முறை, தேவியின் பூரண அருள் பெற பல்வேறு வழிவகைகளை வகுத்துள்ளது. அதில் மிக எளிதானதும், அதீத சக்தி வாய்ந்ததும் ஆனது தேவதா பாதாரவிந்தங்களில் மங்கலப் பொருட்கள் கொண்டு, சக்தியின் ஸகல லீலைகளையும் போற்றும் வகையில் அமைந்த பெயர்களைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனை எனும் வழிமுறை ஆகும்.
சாக்த சாஸ்திரங்கள் - மிக உயர்ந்த வழிபாட்டு முறையாக - லலிதா ஸஹஸ்ரநாமத்தினை அறுதியிட்டுக் கூறுகின்றன.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - வேதங்களுக்கு நிகரானதும், அம்பிகையின் வாக்கு தேவதைகளால் அருளப்பட்டதும், ஸ்ரீ ஹயக்ரீவ பெருமான் -லோபாமுத்ரை ஸஹித அகஸ்தியருக்கு உபதேசித்து உலகோருக்கு அருளியதும், இலக்கணக் குறைகள் இல்லாததும், எளிய வார்த்தைகள் கொண்டதும், அழகிய சந்தங்களுக்கு சொந்தமானதும், கேட்பதற்கு மிக ரம்மியமானதும், பக்தர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சொல்லத் தக்கதும், அம்பிகையின் அனைத்து அம்சங்களையும் பகர்வதும், யந்திரம், மந்திரம், தந்திரம் என மூவகை வழிபாடுகளையும் செய்ததின் முழு பலன் கிடைக்கச் செய்வதும், ஒவ்வொரு எழுத்தும் பீஜாக்ஷரமாக அமைந்து, ஒரு முறை முழுவதும் சொன்னாலே கோடி ஜப பலன் கிடைத்திடுவதும், வேண்டும் வரங்களை உடன் வழங்கிடுவதில் நிகரற்றதும், எதிர்ப்புகளை அறவே நீக்கிடுவதும், பாபங்களை அழித்து புண்ணியங்களைப் பெருகச் செய்வதும் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது.

தில்லை வாழ் அந்தணர்கள் எனும் தீக்ஷிதர்கள் : இம்மஹா வைபவத்தை நடத்தித்தரும் பெரும் பொறுப்பை - சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படும் தமிழகத்தில் உள்ள சிதம்பரம் எனும் ஸ்தலத்தில், ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்திக்கு, அனுதினமும், ஆறுகாலங்களிலும் பூரண வைதீக நெறிமுறைப்படி, அர்ப்பணிப்பு உணர்வோடு, பூஜைகள் செய்வதற்காகவே பூமிக்கு ஈசனால் அழைத்து வரப்பட்டவர்களான - தீக்ஷிதர்கள் ஏற்றுள்ளார்கள். அவர்கள்  ஏப்ரல் 2016ல்  நடராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனை செய்து பெரும் சாதனை புரிந்தவர்கள். அரனுக்கு கோடி அர்ச்சனை செய்த திருக்கரங்களால், நமது ஆலய அம்பிகைக்கு கோடி அர்ச்சனை செய்ய இசைந்துள்ளார்கள். அற்புதமான ஆலயத்தில், அம்பிகையின் ஆயிரம் பெயர்கள் கொண்டு, அந்தணர்களின் திருக்கரங்ளால் கோடி அர்ச்சனை மஹா வைபவத்தைக் காண்பது அரிதிலும் அரிதான மகத்தான நிகழ்வு.
நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு,நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது, கற்ற கல்விக்கேற்ற உத்யோகம்,உத்யோக உயர்வு, வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி மற்றும் வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும் இந்த மஹா மஹா வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு, ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகையின் பரிபூரண அருளால் அனைத்து பயன்களையும் பெற வேண்டுகின்றோம்.
------------------------------------------------------------------------------------------------------
கோடி அர்ச்சனை ஸர்வஸாதகம் :
நி.த. நடராஜ தீக்ஷிதர்
9443479572
&
உ.வெங்கடேச தீக்ஷிதர்
9894406321
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்கள்
----------------------------------------------------------------------------------------------------- 
கேரளா, கொல்லங்கோடு ஸ்ரீ விஸ்வநாதர் ஆலய அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் : Sivagama praveen Vamadevasivam V.Ravi gurukkal
----------------------------------------------------------------------------------------------------- 
இங்ஙனம்
ஸ்ரீ ராமசந்திரன்
ஆலய நிர்வாகிகள்
கிராம பொதுமக்கள்

இந்த மாபெரும் வைபவத்திற்கு நிதியுதவி, பொருளுதவி செய்து, நன்கொடைக்கான முறையான ரசீதும், விசேஷ பிரஸாதங்களும் பெற விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
C.Ramachandran, II/83. Double St, Pudugramam, Kollengode-678506. Kerala State
தொலைபேசி : 04923 262362, 0422 2972926,
அலைபேசி எண்கள்: +91 9446290638, 9488744486
மெயில் ஐடி: ramachandran.chidambaram@gmail.com & chidamba_ram@yahoo.co.in
வெப் ஐடி : http://srimatrenamaha.blospot.in

Bank account details:
State Bank of Travancore, Kollengode Branch, Gayatri complex, Kollengode-678506.
Account no: SB 57042868283
IFSC Code: SBTR0000184
MICR Code: 678009102

சுபமஸ்து ||