அதிசய அற்புத பாடல்கள்
கவிக்கோ(ர்) காளமேகம் எனும் சென்ற பதிவில் தமிழில் சிறப்பு வடிவம் பெற்ற வெண்பாக்களைக் கண்டோம்.
மேலும் சில சிறப்பு வடிவம் பெற்ற பாடல்களை இப்பதிவில் காண்போம்.
ஆங்கிலத்தில் palindrome என்றும், தமிழில் இருவழி ஒக்கும் சொல் என்றும் குறிப்பிடக் கூடியவைகளைக் காண்போம்.
MALAYALAM - இது ஆங்கிலத்தில் இடது புறத்திலிருந்து வலப்புறமாக படித்தாலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக படித்தாலும் ஒரே மாதிரியாக, அதே சொல்லாக அமையக்கூடியது. palindrome என்பது இவ்வகை.தமிழில் - விகடகவி - இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது.

ஆங்கிலத்தில் பாலிண்டிரோம்கள் அதிகம்.
I PREFER PI
MADAM I'M ADAM
MADAM I'M ADAM
NEVER ODD OR EVEN என்பவை சில பிரபலமான பாலிண்டிரோம்கள்.
இவை போல ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட பாலிண்டிரோம்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
தமிழில் பாலிண்டிரோம்கள் மிகக் குறைவே. ஒற்றெழுத்துக்கள் எனக் கூடிய புள்ளி வைத்த எழுத்துக்கள் தமிழில் பாலிண்டிரோம்கள் எழுதச் சற்றே தடையாக உள்ளன.
ஆயினும், பல பாலிண்டிரோம்கள் எழுதப்பட்டுள்ளன.
குறைவான எழுத்துக்கள் கொண்டவை :
தாத்தா
பாப்பா
தேரு வருதே
மோரு போருமோ
"பூவாளை நாறு நீ பூமேக லோகமே பூ நீறு நாளை வா பூ"- தண்டியலங்காரக் குறள் வெண்பா .
தமிழ் நால்வரில் ஒருவரும், தமிழின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவரும், தெய்வங்களுக்குத் தனித் தமிழில் பெயர் அமைத்தவரும், தம் பாடல்களால் சைவ சமயத்தைப் பெரிதும் வளர்த்தவரும், உமை அம்பிகையால் ஞானப் பால் குடித்தவரும், திராவிட சிசு என்று போற்றப்படக் கூடியவரும் ஆகிய திருஞானசம்பந்தர் தமிழின் மிக நீளமான பாலிண்டிரோமை அக்காலத்திலேயே அழகுற அமைத்திருக்கின்றார்.

சைவத்தின் வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளின் முதல் மூன்று திருமுறைகளாக திருஞானசம்பந்தரின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.திருஞானசம்பந்தர் பாடல்களில் மாலை மாற்றுப் பதிகம் என்பது முழுக்க முழுக்க தமிழ் பாலிண்டிரோம்தான்.
திருஞான சம்பந்தர் இயற்றிய மாலை மாற்று (PALINDROME) பதிகம்
திருச்சிற்றம்பலம்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா 1
-------------> <-------------------
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயாயாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா 2
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமாமாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா 3
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமேமேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ 4
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீவீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா 5
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயேயேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே 6
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானேநேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ 7
நேணவரா விழயாசைழியே வேகதளேரிய ளாயுழிகாகாழியுளாய ரிளேதகவே யேழிசையாழவி ராவணனே 8
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூபூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா 9
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதேதேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே 10
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே 11

(மேற்கண்ட பாடல்களில் ஒற்றெழுத்து எனும் புள்ளி வைத்த எழுத்துக்கள் வரவில்லை என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.
மேற்கண்ட பாடல்களுக்கு மிக அழகிய பொருள் உண்டு. முதல் பாடலின் பொருள் : சிற்றுயிர்களாகிய நாங்கள் கடவுள் அல்லர், சிவபெருமானாகிய நீ மட்டுமே எங்களுக்கு கடவுள்)
இதே போல பாலிண்டிரோம்கள் தமிழில் இன்னும் சில உண்டு. ஆனால் திருஞான சம்பந்தர் இயற்றியது போல அமையவில்லை.
மாதவச் சிவஞான யோகிகள் என்பவர் காஞ்சிப் புராணத்திலும், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரின் குருவாகிய, திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் இயற்றிய, திருநாகைக்காரோணப் புராணத்தில் பாலிண்டிரோம் வகைக் கவிதைகளை இயற்றியுள்ளனர் என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர்.
மிக அதிசய அற்புத பாடல்
பாலிண்டிரோம் என்பது இரு வழிகளிலும் படித்தாலும் ஒரே அர்த்தத்தை மட்டுமே கொடுக்கக் கூடியது.
மிக அற்புதமாக, ஒரு பாடலை இடமிருந்து வலமாகப் படித்தால் ஒரு அர்த்தத்தையும், அதே பாடலை வலமிருந்து இடமாகப் படித்தால் வேறொரு அர்த்தமும் கொண்ட பாடல் ஒன்று உண்டு. இது பாலிண்டிரோம் வகைதான். ஆனால் இரு வேறு அர்த்தங்கள் உண்டு.
வடமொழியில் அமைந்த அந்த அற்புதப் பாடலைக் காண்போம்.
'ராகவ யாதவீயம்' எனும் பெயர் கொண்ட அந்தக் காவியம் முதல் எழுத்தில் ஆரம்பித்து, கடைசி எழுத்து வரை நேராகப் படித்தால் ராகவன் எனும் ராம பிரானின் கதையைக் கூறும் ராமாயணமாகவும், கடைசி எழுத்தில் தொடங்கி, முதல் எழுத்து வரை, திருப்பிப் படித்தால் கண்ண பிரானின் கதையைக் கூறும் பாகவதமாகவும் பொருள் தரக் கூடிய வகையில் அற்புத, அதிசயமான காவியமாக இயற்றப்பட்டுள்ளது.
ராகவ யாதவீயம்
====> (READ LEFT TO RIGHT)
ஓம் வந்தேஹம் தேவம் தம் ஸ்ரீ தம் ரந்தாரம் காலம் பாஸா ய: I ராமோ ராமாதீராப்யாகோ லீலாமாராயோத்யே வாஸே II
<==== (THE ABOVE SAME IS IN RIGHT TO LEFT) :
ஸேவாத்யேயோ ராமாலாலீ கோப்யாராதீ மாராமோரா: I யஸ்யாபாலங்காரம் தாரம் தம் ஸ்ரீதம் வந்தேஹம் தேவம் II
ராகவ யாதவீயம் எனும் இந்த உன்னத மகா காவியம், கர்நாடக மாநிலத்தில், கி.பி.18ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வேங்கடாத்வரி எனும் மகாகவி இயற்றியது. மேற்கண்டது முதல் பாடல் மட்டுமே. இது போல் முப்பது பாடல்கள் எழுதியிருக்கின்றார்.

தமிழில் சில சிறப்பு வகை கவிதை அமைப்புகள் :
தமிழில் முரசு பந்தனம், வேல் பந்தனம், நாக பந்தனம், தேர் பந்தனம் போன்றவை உண்டு. உதாரணமாக, முரசு பந்தனம் என்பது, நான்கடிகள் கொண்ட ஒரு பாடலை எழுதி, அப்பாடலைப் படத்திற் காட்டடியபடி முரசு வார்களின் மேல் எழுதவேண்டும்.
அதேசமயம் நான்கு அடிகளையும் முதலடி தொட்டுக் கடையடி ஈறாய், மேலிருந்து கீழ் இழிந்தும், கீழிருந்து மேல் நோக்கியும், தத்தம் வார்கள் போக்கிய வழியிற் சென்று படித்தாலும் பாடலடிகள் கிடைக்கப்பெறும்.
பாடல்
பாடல்
நாதமு தீநய மேதரு முரசே !
காதமுதீநய மேதரு முரசே !
போதமு தீநய மேதரு முரசே !
நாதமு தீநய மேதரு முரசே !
நாக பந்தனம்
முரசு பந்தனம் போல் நாக பந்தனம் என்பதும் மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்து பின்னிக் கொண்டு அமைந்திருக்கும். நான்கு பாம்புகளுக்கு¡¢ய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.
பாடல் 1.தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங னறித லுலகியலை - முன்னுவந்துன்னை யறிக முதல்.
பாடல் 2.நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை.
பாடல் 3. ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ !
பாடல் 4.உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயேலென்னை பயக்குமோ சொல் !
வேல் பந்தனம்
மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.
இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.
“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’
இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி, முருகனின் அருள் விரைவில் கிட்டும்.
சிதம்பரத்தில், சிவகங்கை குளக்கரை மண்டபத்தில், முருகனின் வேல் பந்தனம் எனும் தமிழ் மந்திர எழுத்துக்கள் கொண்ட மந்திர அமைப்பு வரையப் பட்டுள்ளது. எதிரிகளின் இடத்திற்கு செல்லும்போது, காப்பு எனும் கவசம் அணிந்து செல்வது போர் முறை. அதேபோல் மந்திர காப்பு கவசமாக இந்த வேல் பந்தனம் நம்மைக் காத்து, வெற்றியளிக்கும் என்பது ஐதீகம்.

இதே போல் ரத பந்தம் என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது.
தேர் போல கட்டங்கள் வரைந்து அதில் எழுத்துக்களை பதித்து அழகிய பாடலாக அமைப்பது.இவற்றைப் பற்றி தனியே ஒரு பதிவில் காண்போம்.
தமிழில் உள்ள தனிச் சிறப்பான அம்சங்கள் கொண்ட பாடல்களையும், அவற்றின் சிறப்புகளையும் தனியே ஒரு பதிவில் காண்போம்.
தமிழில் உள்ள தனிச் சிறப்பான அம்சங்கள் கொண்ட பாடல்களையும், அவற்றின் சிறப்புகளையும் தனியே ஒரு பதிவில் காண்போம்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
yanthralaya@yahoo.co.in
94434 79572
3 comments:
Palindrome இதற்கு தமிழில் மாலை மாற்று என்று பெயர். இது சித்திர கவிகளில் ஒரு வகை. சித்திர கவிகளுக்கான இலக்கணம் தண்டி அலங்காரம் எனப்படும். சமீபத்தில் வாழ்ந்த திருவையாறு அப்துல் கபூர் சாஹிப் என்ற பெரும்புலவர் இவ்வகை பாடல்களில் மிக வல்லவர். அவர் அஷ்ட நாக பந்தம், சிவலிங்க பந்தம், சதுர பந்தம் முதலியன பாடி உள்ளார். உ வே. சா போன்ற தமிழ் அறிஞர்களால் பாராட்டப் பட்டுள்ளார்.அவர் முருகக்கடவுள் மீது மிஹுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.
T R Ramesh
இப்போத் தான் போன மாசம் எங்க குழுமத்தில் இந்த ரத பந்தம், நாக பந்தம் பற்றிய கவிதைகள் வந்தன. நன்றி விளக்கத்திற்கு. ஹிட் கவுண்டர் வேலை நல்லாச் செய்யுதுனு நம்பறேன். உங்க பதிவு சில சமயம் திறக்கவே மாட்டேனு அடம்! என்னனு பாருங்க! மூணு நாளா முயன்று இன்னிக்குத் தான் முடிஞ்சது! :)))))))))
வள்ளலார் மாலைமாற்றுத் திருப்பதிகம் (தி.ம.இராமலிங்கம் - கடலூர்)
திருஅருமரு தூராகாரா வாடாகரு ணாசாகா
காசாணாரு கடாவாரா காராதூரு மருஅருதி (1)
தாபாதா தாமருத ராலூடவ மேதவமே
மேதவமே வடலூரா தருமதா தாபாதா (2)
யாரிது காளாவ டுகூகையோ கியோ
யோகி யோகைகூடு வளாகா துரியா (3)
யாகாஆகாங் லிமராயா காயமாமாய
யமாமாய காசயாரா மலிங்கா ஆகாயா (4)
யாபாசனஞானா மதாதீதா ஓதாநாதா சாதாகாசா
சாகாதாசா தாநாதாஓதா தீதாமனா ஞானசபாயா (5)
யாதிஜோதியா ராவாராக சீவசாதீயா மசனாபோ
போனாசமயாதீசா வசீகரா வாராயாதி ஜோதியா (6)
யாசாயாமா சாபூதைவாதே காமலாலீ காமுறுஆ
ஆறுமுகா லீலாமகா தேவாதைபூசா மாயாசாயா (7)
காலபாதீ சோகாடபாப தீதாஈராநீ யாடிமுடிய
யடிமுடியா நீராஈதா தீபபாடகா சோதீபாலகா (8)
ராகாவியா விகாடாமடு கூவிலக திருகு
குருதிகலவி கூடுமடா காவியா விகாரா (9)
யகழ்வா களையா கருணீகா சமரசா
சாரமச காணீருக யாளைக வாழ்கய (10)
Post a Comment