Saturday, July 10, 2010

ஆஷாட நவராத்திரி

ஆஷாட நவராத்திரி 
(20.06.2020 - 29.06.2020)

அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறை சாக்த வழிபாடு. சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான்.

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.
12 மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.
அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

நான்கு விதமான நவராத்திரிகள் :
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி .(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
வசந்த நவராத்திரி யை கடந்த பதிவுகளில் கண்டோம்.
இங்கு ஆஷாட நவராத்திரி பற்றிக் காண்போம்.

வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம்.
பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.
விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம்.
இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.

பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது.
வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது.
தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.

வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.

வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.




























ஆஷாட நவராத்திரியில் அம்பிகையை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.



- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி &; பூஜை
செல் : 94434 79572, 93626 09299
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.com

18 comments:

Anonymous said...

ஆஹா மிக அருமை.சரியான நேரத்தில் முறையான பதிவு.அப்படியே சண்டீ ஹோமத்தில் தேவி மஹாத்மியம் பற்றியும்.அதன் ஒவ்வொரு அத்யாயத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதையை ஏன் வைத்துள்ளனர்....என்பது பற்றிய விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.நமஸ்காரம்

gvsivam said...

நமஸ்காரம்,
மறந்துபோகின்ற விஷயங்களை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்த பதிவு.மிக்க நன்றி.அப்படியே பச்சைவாழி அம்மன் பற்றிய தங்களுக்கு தெரிந்த விபரங்களை பதிவிட்டால் நலம்.
1.பச்சைவாழி அம்பிகை சொலைகளுக்கு நடுவிலேயே இருக்கிறாள்.மேலும் சாகம்பரி தான் பச்சைவாழி என்ற கருத்தும் உள்ளது.
விவசாயம் சம்மந்தப்பட்டது ஆஷாட நவராத்ரி என்ற தங்களின் கூற்றை நோக்கும்போது,அசுர வதத்திற்கு பின் பூலோகமே வரட்சியாக இருந்ததாகவும் அம்பிகையின் ஆஞைபடி சாகம்பரிதேவியே பயிர்களை தோற்றுவித்து செழிக்க வைத்ததாக தேவீமஹாத்மியத்தில் ஒரு குறிப்பு உள்ளது.இவைகளை ஆராய்ந்து விரிவான ஒரு பதிவை வழங்கவும்.நமஸ்காரம்

gvsivam said...

நமஸ்காரம்,
மறந்துபோகின்ற விஷயங்களை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்த பதிவு.மிக்க நன்றி.அப்படியே பச்சைவாழி அம்மன் பற்றிய தங்களுக்கு தெரிந்த விபரங்களை பதிவிட்டால் நலம்.
1.பச்சைவாழி அம்பிகை சொலைகளுக்கு நடுவிலேயே இருக்கிறாள்.மேலும் சாகம்பரி தான் பச்சைவாழி என்ற கருத்தும் உள்ளது.
விவசாயம் சம்மந்தப்பட்டது ஆஷாட நவராத்ரி என்ற தங்களின் கூற்றை நோக்கும்போது,அசுர வதத்திற்கு பின் பூலோகமே வரட்சியாக இருந்ததாகவும் அம்பிகையின் ஆஞைபடி சாகம்பரிதேவியே பயிர்களை தோற்றுவித்து செழிக்க வைத்ததாக தேவீமஹாத்மியத்தில் ஒரு குறிப்பு உள்ளது.இவைகளை ஆராய்ந்து விரிவான ஒரு பதிவை வழங்கவும்.நமஸ்காரம்

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

நன்றிகள் பல.
சாகம் என்றால் தாவரம். சாக பக்ஷிணி என்றால் தாவர உண்ணிகள். சாகம்பரி பற்றி நிறைய எழுத வேண்டும்.
பாகவதத்தில் பெருமாள் ஒரு பிரளய முடிவில் அனைத்து ஜீவராசிகளின் தாதுக்களை எடுத்தாரோ அது போல தேவி பாகவதத்திலும் சாகம்பரி தாவர ஜீவன்களின் தேவதையாகவே கூறப்படுகின்றாள். தற்போது switzerlandல் உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் மூலங்களையும் ஜீன்களையும் பூமிக்கு அடியில் மிகவும் பாதுகாப்பாக சேமிக்கின்றார்கள். பிறகு விபரம் எழுதுகின்றேன்.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

நான் ஒரு பச்சைவாழி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செய்யும் போது பல ஆய்வுகள் மேற்கொண்டேன்.
காத்யாயனிதான் பச்சைவாழியம்மனாக விளங்குகின்றாள் என்பது ஒரு கருத்து.
தான்ய லக்ஷ்மிதான் என்பதும் ஒரு கருத்து.
பம்பை அடிக்கும் ஒரு பெரியவரிடம் கேட்ட போது பல அற்புதமான விஷயங்களைக் கூறியுள்ளார். முடிமேல் மிடியழகி, பூங்குறத்தி என்றெல்லாம் செல்கின்றது காதை.

Geetha Sambasivam said...

அருமையான பதிவுக்கு நன்றி. வட நாட்டில் முளைப்பாரி எடுப்பார்கள். அதுவும் குஜராத்தில் இது அதிகமாய்க் காணலாம். பச்சைவாழி அம்மன் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கேன்.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

நன்றி ஸ்ரீமதி,
உங்கள் பாராட்டுக்களால் ஊக்கம் அடைந்தேன்.

geethasmbsvm6 said...

பச்சைவாழி அம்மன் கதையைத் திருவண்ணாமலைப் பக்கம் வேறே மாதிரியாய்ச் சொல்கின்றனர். அதைக் குறித்து ஆன்மீக நம்பிக்கைக்குழுமத்தில் பதிவும் இட்டிருக்கிறேன். ஆஷாடநவராத்திரி ஆரம்பத்தில் இந்தப்பதிவை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

geethasmbsvm6 said...

தொடர

geethasmbsvm6 said...

நினைவூட்டலுக்கு நன்றி.

Marudu said...

Very Nice Aiyya...

Geetha Sambasivam said...

நினைவூட்டலுக்கு நன்றி.

anandan vaidhyanathan said...

om nama sivahya! guruveh namah! i love the article and it enlightens that our future is sprouting and protected by goddess matha. Our growth is ensured and assured by having faith in her and she enable our talent and bless us with health and hygeneic food. For that reason on every quarter of year she form part of nature and our ancestors have experienced and left us indication of the same and made us to follow. I really whole heartedly want thank our guru in this instant. I pray for every living being and let our matha bless everyone with food,shelter,clothes,good character,attitude,behaviour,manner,education,health,parents,
brothers and sisters,friends,relatives,neighbour,wife/husband,children and good job. Our life will be enlightened and guru blessing and parents blessing will be forever. our belief in them is our relief from pain. om santhi

Geetha Sambasivam said...

தகவலுக்கு மிக்க நன்றி.

rakini said...

Nice info

rakini said...

பயனுள்ள தகவல்கள்.
அருமையான விளக்கம்.
நன்றி.

rakini said...

பயனுள்ள தகவல்கள்.
அருமையான விளக்கம்.
நன்றி.

rakini said...

பயனுள்ள தகவல்கள்.
அருமையான விளக்கம்.
நன்றி.