கடந்த ஒன்றரை மாத காலமாக, காலத்தின் கோலத்தின் சிறு பகுதியைப் பார்த்தோம். கால கணிதம் பற்றி எழுதுவதற்கு அனேகம் உள்ளது. அதற்கு காலம் போதாது.
கால கணிதம் - 1 (எதிர்காலத்தை எழுதினோம்)
கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)
கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)
கால கணிதம் - 4 (கலிதோஷத்தினை நீக்கிய கணிதம்)
கால கணிதம் - 5 (கால கணித ஆலயம் - மோட்சம் தரும் காட்சி)
ஆகிய ஐந்து பதிவுகளையும் "கால கணிதம்" என்ற ஒரே தொகுதியாகக் கொடுத்திருக்கின்றேன். சற்றே பெரிய பதிவுதான்.
ஆயினும் ஒரே காலத்தில் இந்தப் பதிவுகளைப் படிக்க வசதியாகத்தான் இந்தப் பதிவு.
கால கணிதம் எனும் பகுதியை எழுத ஆரம்பிக்கும்போது இப்படி ஐந்து பதிவுகளாக எழுதவேண்டும் என்று திட்டமிடவில்லை. (பஞ்சாங்கத்தில் உள்ள கணித வகைகளை எழுதத்தான் நினைத்திருந்தேன்.) ஆயினும், காலம் தான் இப்படி எழுதத் தூண்டியது எனலாம்.
எல்லாம் காலத்தைப் படைத்த இறைவன் செயல்.
சரி, இனி கால வெள்ளத்தில் நுழையலாம்.
0 என்பது ஏதாவது ஒரு கிழமை எனக் கொண்டால் +1 என்பது அடுத்த கிழமை.
எதிர்வரும் ஆண்டு விக்ருதி ஆண்டு.
விக்ருதியே வருக ! வளம் பல தருக !!
வாரத்தைச் சொல்வதால் ஆயுள் வளரும்; திதியைச் சொல்வதால் ஐஸ்வரியம் கிடைக்கும்; நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாவங்கள் நீங்கும்; யோகத்தைக் கூறுவதால் நோய் குணமாகும்; கரணத்தைச் சொல்வதால் நினைத்த காரியம் நடக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)காலத்தை நமது ஆன்றோர்கள் மிகக் குறைந்த நேரம் முதற்கொண்டு மிகப் பெரும் அளவுள்ள நேரம் வரை பகுத்திருக்கின்றார்கள்.
காலம் என்று சொல்லும் போதே நமக்கு மூன்று காலங்கள் புலப்படுகின்றது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்.
கடந்த காலத்துக்குப் போவோமா?
ஒரு தோராயமான கணக்கு : இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்களில் ஒருவர் 30 வயதில் பூமியிலிருந்து குறிப்பிட்ட ஒளி ஆண்டு வேகத்தில் யுரேனசுக்குச் செல்கின்றார் எனில், அவர் 35 வது வயதில் யுரேனசை அடைந்து, திரும்ப அவர் 40 வயதில் பூமியை வந்தடைந்தார் என்றால், அவருடனே பிறந்த சகோதரனுக்கு 45 வயதாகியிருக்கும். (இங்கே குறிப்பிட்ட எண்ணிக்கைகள் அனைத்தும் எடுத்துக்காட்டிற்காக மட்டுமே. மிகத் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனின் பதிவு மேலும் நீளும்.)
அறிவியல் வழியில் காலத்தைப் பார்த்தோம்.
காலக் கணிதத்தினை எப்படியெல்லாம் நம் ஆன்றோர்கள் பகுத்திருக்கின்றார்கள் என்று பார்ப்போம்.
புராணங்களின் கூற்றுப்படி கீழ்க்கண்ட கணக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
கண்ணிமை 2 = 1 கைந் நொடி
பி.கு. : இந்தப் பதிவு மிக விரிவாக எழுத நினைத்து, ஆன்றோர்கள் கூறுவது போல 'விரிவஞ்சி விடுத்தனம்'. என்றாலும் காலத்தின் கோலத்தை மிக விரிவாக பிறிதொரு காலத்தில் கணக்கிடுவோம்.
நிகழ்காலத்தில், நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியிலும், நாம் செய்கின்ற அனைத்து செயல்களிலும் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாகவே செய்ய உறுதி மேற்கொள்வோம்.
"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்த்ரே அஷ்டாசாவிகும்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷே பரத கண்டே மேரோ: தக்ஷ’ணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம ஸம்வத்ஸரே (உத்தர/தக்ஷ¢ண) அயனே (வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) ருதௌ ...... மாஸே (சுக்ல/ கிருஷ்ண) ப§க்ஷ ......சுபதிதௌ வாஸர: (பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம் சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
என்று முடிந்து, யார் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.
மேலே சொல்லப்பட்ட "சுபே சோபனே ...... அஸ்யாம்" வரையில் நிகழ்கால கணிதத்தைச் சொல்ல விழையும் ஸ்லோகம் ஆகும்.
பரம்பொருளின் காலம் = 2 கல்பம்
த்விதீய பரார்த்தே - இரண்டாவது பரார்த்தம் - பிரம்மாவிலிருந்து தொடங்குகிறது கால கணக்கு. பிரம்மாவானவர் சிருஷ்டியைத் தொடங்கி பிறகு முடிப்பது வரை உள்ள காலக் கணக்கு மஹா கல்பம்.
ஸ்வேதவராஹ கல்பே - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.
வைவஸ்வத மன்வந்தரே - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.
அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம். வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.
ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. (1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)
பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம். (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)
பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.
மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.
மேற்கண்ட பிரம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்திலிருக்கும், ஹோமத்தை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலம் விக்ருதி எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில், உத்தராயணம் அல்லது தக்ஷ¢ணாயனம் எனும் இரு அயன காலத்தில் உத்தராயண காலத்தில், ஆறு ருதுக்கள் கொண்டவற்றில் வஸந்த ருதுவில், சித்திரை மாதத்தில், வளர்பிறை சதுர்த்தி தினத்தில், ஞாயிறு கிழமை, ரோகிணி நக்ஷத்ரம் (18.04.2010) இணைந்த சுபமுஹ¥ர்த்த சுப யோக தினத்தில் செய்யப்படும் கணபதி ஹோமம், கர்த்தாவின் பெயர் நக்ஷத்திரம் சொல்லப்பட்டு, அவர்களின் நல்வாழ்க்கைக்காக செய்யப்படுகின்றது என்பதே "சுபே சோபனே .... கரிஷ்யே" என்பது வரை சொல்லப்படும் ஸ்லோகத்தின் அர்த்தமாகின்றது.
எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது.
ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.
கால கணிதத்தின்படி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது கலியுகம்.
சிறப்புப் பெற்ற கணிதத்தை அறிந்து கொண்டதால் வாழ்வில் சிறந்த ஒரு காவிய நாயகனின் வரலாற்றில் நடந்த சம்பவத்தை இங்கு காணவிருக்கின்றோம்.
கணிதம் கற்றதால், கலி விலகியது !
சுருக்கமாக நள சரித்திரம் :
நளனுக்கு அச்வ (குதிரை) சாஸ்திரம் நன்கு தெரியும். ஆகையால் குதிரைகளின் காதில் மந்திரம் ஓதினான். தன் மனைவியின் சுயம்வரத்திற்காக மற்றொருவனை தேரில் ஏற்றி மாமன்னனாகிய நளன், ரதத்தைச் செலுத்துகின்றான். வாயு வேகத்தில் தேர் பறக்கின்றது. ரிதுபர்ணன் இதுவரை காணாத வேகத்தைக் காண்கின்றான். அரசனின் உத்தரீயம் எனும் மேல் துண்டு ரதத்தின் வேகத்தால் பறந்து விழுகின்றது.
ரிதுபர்ணன் ரதசாரதியாகிய நளனாகிய வாகுகனைக் கூப்பிட்டு, "துண்டு விழுந்துவிட்டது, எடுக்க வேண்டும்" என்று கூறுகின்றான். இதைக் கூறி முடிக்கும் முன்பே ரதம், விந்தை மிகு வேகத்தால், பல காதம் (பல கிலோமீட்டர்கள்) கடந்துவிட்டது. ஆச்சர்யம் அடைந்த அரசன் தன் தேரோட்டி சாதாரணன் அல்ல, அவனிடம் வித்தை இருக்கின்றது எண்ணி, வாகுகனைப் பணிந்து வணங்கி, தேரினை வேகமாக செலுத்த உதவும் அஸ்வ சாஸ்திரத்தைப் போதிக்கக் கேட்கின்றான். அதற்குப் பதிலாக தான் வல்லமை பெற்ற விருக்ஷ (மரம்) சாஸ்திரம் என்ற கணித சாஸ்திரத்தை நளனுக்கு அறிவிக்கின்றான்.
விருக்ஷ சாஸ்திரம் என்பது ஒரு மரத்தைப் பார்த்த உடனேயே அதில் எத்தனை இலைகள், கிளைகள், காய்கள், கனிகள், பூக்கள் என்பனவற்றை உடனடியாக அறியும் ஒரு அற்புதக் கணிதக் கலை. தற்காலத்தில் மைக்ரோசா•ப்ட் பில்கேட்ஸ், விப்ரோ (மைண்ட் ட்ரீ) ஆசிப் ப்ரேம்ஜி, இன்•போசிஸ் நாராயண மூர்த்தி போன்றோர்கள் பெரும் செல்வம் கொண்டமைக்கு ஒரு பெரும் காரணம், கணிதம் அறிந்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கணிணியே காலத்தை வெல்லும் காரணியாக (கால கணிதத்தையும்) அறிந்து அதில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்கள்.
உபரி தகவல் :
அந்த அழகிய பதக்கம் இன்றளவும் ஆனித் திருமஞ்சன உத்ஸவத்திலும், மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவத்திலும் "நள சக்கரவர்த்தி பதக்கம்" எனப் போற்றப்பட்டு, ஸ்ரீமன் ஆனந்த நடராஜ மூர்த்திக்குச் சாற்றப்படுகிறது.
ஆன்மீகம். ஆன்மாவை ஒருமுகப்படுத்தி இறைவனை நாடிடும் ஒரு அற்புதமான பாதை. ஆன்மீகப் பாதை அறப்பாதை. ஆன்மீகம் காட்டும் வழிகள் அனைத்தும் நல்வழிகளே.
பயிர் செழித்தால் நாடு செழிக்கும் என்பது போல ஆன்மீகம் செழித்தால், மக்கள் நலம் செழிக்கும். ஒற்றுமை உண்டாகும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருந்தாலும், ஒரு ஆன்மீகவாதியின் இறுதியான வேண்டுதல் என்னவாக இருக்க வேண்டும்?
அது மோட்சம் மட்டுமே. மோட்சம் அல்லது முக்தி என்பது மீண்டும் பிறவாத வரம் கேட்பதுதான் இறைவனிடம் வேண்டப்படும் கடைசி வேண்டுதல்.
தர்ம, அர்த்த, காம்ய, மோக்ஷ - அறம், பொருள், இன்பம், வீடுபேறு (முக்தி) - இந்த வார்த்தைகள் தான் எந்தவொரு ஆன்மீக வேண்டுதலிலும் அமையும்.
மனிதன் தான் செய்யும் கர்மாக்களுக்குத் தகுந்தாற்போல அடுத்தடுத்த பிறவிகள் அமையும் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்கின்றது.
ஒரு ஆன்மா, ஜீவாத்மாவாக - உயிர் கொண்டு பிறவி எடுத்தால், அது மீண்டும் இறைவனாகிய பரமாத்மாவிடம் கலப்பது தான் மோட்ச நிலை.
ஜீவாத்மா => பல பிறப்புகள் => பரமாத்மாவிடம் ஒன்று சேர்தல்.
த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற ஆன்மீகக் கொள்கைகள் பல வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டாலும், மேற்கண்ட வாக்கியத்தையே உறுதிப்படுத்துகின்றன.
கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்புகளின் எண்ணிக்கை மாறுபடும். (ஏழுகடல்களின் மணல்களைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், என் பிறப்புகளின் எண்ணிக்கையை அளவிட முடியாது என்கிறார் அருணகிரிநாதர்)
கலிகாலத்தில் வாழும் நாம் மோட்சத்தை அடைய என்னதான் வழி? பக்திநிலையை சரியாக பின்பற்ற முடியுமா? மோட்சத்தை அடைய எளிய வழி எது ?
இக்கேள்விகளுக்கும் ஆன்மீகம் விடைதருகின்றது.
க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் போன்ற காலங்களில் எங்கும் கோயில்கள் கிடையாது. (துவாபர யுகத்தில் நடைபெற்ற பாகவதத்தில் சில கோயில்கள் இருந்ததாக (ருக்மி, ருக்மிணி, கிருஷ்ணன் - திருமணம்) - கூறப்படுகிறது.)
அப்பொழுதெல்லாம் கடும் தவம், பெரும் வேள்விகள், வடக்கிருத்தல் போன்றவையே மோட்சத்தைத் தரக் கூடியனவாக இருந்தன.
அந்த யுகங்கள் இறைவனே நேரில் நின்ற காலம்.
ஆனால், கலியுகம் - இறைவனை ஆலயங்களில் தரிசித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
நமது ஆன்றோர்கள் சில ஆலயங்களை முக்தி தரும் ஆலயங்களாக வகுத்துள்ளார்கள். (சிவ மஹா புராணம்)
திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும்.
காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி கிடைக்கும்.
காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்.
திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி கிடைக்கும்.
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும்.
திருவாரூரிலே பிறத்தலும், காஞ்சியிலே வாழ்வதும், காசியில் இறப்பதும் அனைவருக்கும் கிடைப்பது அரிது.
சிதம்பரத்தை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும்.
சிதம்பரத்தின் அருமை பெருமைகளை விளக்கும் நடேச தண்டகம் எனும் நூல் "சிதம்பரம்" என்று சொன்னாலே (நாம உச்சாரண மாத்ராத் முக்தி ப்ரதே - 19வது ஸ்லோகம்) முக்தி கிடைக்கும் என்கிறது.
மேற்கண்ட ஸ்தலங்களின் பெருமை அளவிடற்கரியது.
ஆயினும், தரிசித்தால் முக்தி என்பதை எப்படி சிதம்பரம் அளிக்கின்றது என்பதைக் காண்போம்.
சிதம்பரம் - ஆனந்தமாக நடராஜர் நடமிடும் ஸ்தலம்.
அப்படிப்பட்ட சிதம்பர க்ஷேத்ரம், நாம் வாழும் கால வெள்ளத்தின் கணக்குப் படியும், உடல் கணித படியும் அமைந்து தரிசித்தாலே முக்தியைத் தரவல்லது.
ஒரு சிறு காலக் கணக்கு :
நான்கு பொழுதுகள் = 1 நாள் (காலை, மதியம், சாயங்காலம், இரவு)
ஏழு நாட்கள் = ஒரு வாரம்
52 வாரங்கள் = ஒரு வருடம்
365 நாட்கள் = ஒரு வருடம்
சிதம்பரத்திற்கு நான்கு கோபுரங்கள் உண்டு. நான்கு கோபுரங்களும் நான்கு பொழுதுகள்.
ஒவ்வொரு கோபுரமும் ஏழு நிலைகளைக் (ஏழு மாடிகள் அல்லது ஏழு அடுக்குகள்)கொண்டது. ஏழு நிலைகளும் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.
கோபுரத்தின் மேலே பதின்மூன்று கலசங்கள் உள்ளன.
நான்கு கோபுரங்களின் உச்சியில் 365 விளக்குகள் ஏற்ற வசதியாக பெரும் அகல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 365ம் ஒரு வருடத்திலுள்ள நாட்களைக் குறிக்கின்றன.
மோக்ஷ தீபம் :
ஒருவர் இறந்துவிட்டால் அவர் மோக்ஷம் செல்ல வசதியாக வெளிச்சம் வேண்டும் என வேண்டிக்கொண்டு அவருக்காக அவருடைய உறவினர்களோ அல்லது நண்பர்களோ ஏற்றக் கூடியது மோக்ஷ தீபம்.
இந்த மோட்ச தீபம் மிகவும் புனிதமானது. ஆத்மாவுக்கு ஒரு நல்வழியைக் காட்டக் கூடியது.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்களும், இறந்துவிட்ட முன்னோர்கள் நல்லபடியாக மோட்சம் அடைய வேண்டியும், முன்னோர்களுக்கு நற்கதி ஏற்பட வேண்டியும் ஏற்றப்படும் மோட்ச தீபம் மிகவும் பலனளிக்கக் கூடியது.
இறந்துவிட்ட முன்னோர்களுக்கான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்ற செயல்கள் செய்ய முடியாதவர்கள், அந்த ஆத்மா திருப்தி அடைய மோட்ச தீபம் ஏற்றப்படுகின்றது.
இதுவரை, கோயிலின் வெளிச்சுற்றில் அமைந்த கோபுரங்கள் காலக் கணக்கின் அடிப்படையைக் கொண்டது எனக் கண்டோம்.
அடுத்து உள் செல்வோம். இனி மனித உடல் கூறு கணிதம் இடம்பெறுகின்றது.
நமது உடல் பஞ்ச கோசங்களாகப் பகுப்பட்டிருக்கின்றது. (யோக சாஸ்திரம்).
அவை 1. அன்னமய கோசம், 2. பிராணமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞான மய கோசம், 5. ஆனந்தமய கோசம்.
1. அன்னமயகோசம் - உணவினால் வலுப்பெறும் உடல்
2. பிராணமயகோசம் - மூச்சுக் காற்றினால் வலுப்பெறும் உடல்
3. மனோமய கோசம் - பேச்சு, உணர்வுகள் கொண்ட உடல்
4. விஞ்ஞானமயகோசம் - புத்திக் கூர்மை (மூளை)
5. ஆனந்தமய கோசம் - இதுவே உயிர்நிலை. இதயத் துடிப்பு
மேற்கண்ட ஒவ்வொன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புகொண்டது.
1.உணவு எனும் சாப்பாடு நின்று போனால் வெளி உடல் இயக்கம் நின்றுபோகும். சுவாசம் குறையும்.
2.மூச்சுக்காற்று குறையும் போது உடலின் செயல்பாடுகள் குறையத் தொடங்கும்.
3.மூச்சு குறைந்தால் தொடுதல் போன்ற உணர்வுகள் மங்கும்.
4. உணர்வுகள் குறைந்தால் மூளை செயலிழக்கும்.
5. இறுதியாக, இதயத் துடிப்பு - இது நின்றால் உடலில் இருந்து உயிர் பிரிந்து ஆன்மாவாக மாறும்.
(உலகத்தின் இதயத் துடிப்பாக சிதம்பரம் விளங்குகின்றது. ஆகையால் சிதம்பரம் இருதய க்ஷேத்ரம் என்று கூறப்படுகின்றது. உலகிற்கு உண்டான ஆதாரத் துடிப்பு (dynamic) சிதம்பரம். அதுவே ஆனந்த நடனம். அதுவே உலகத்தையே செயலாற்றல் புரியவைக்கும் ஆதார விசை.
ஐந்து கோசங்களின் செயல்பாடுகள் குறைவதால், படிப்படியாக உயிர் பிரிகின்றது.
இதையே தலைகீழாகப் பார்த்தோமானால், உயிர் உருவாகி, மூளைத் திறன் அதிகரித்து, உணர்வுகள் பெற்று, நல் சுவாசம் கொண்டு, நல்ல உணவும் எடுத்துக்கொண்டால் தான் பூத உடல் வலுவாகின்றது.
மேற்கண்ட பஞ்ச கோசங்களே ஐந்து பிரகாரங்களாக சிதம்பரத்தில் அமைந்துள்ளது.
ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சித்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.
இந்த சித்ஸபையும் உடல் கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.
பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.
இந்த தங்க ஓடுகள் 72,000 தங்க ஆணிகள் கொண்டு இணைக்கப் பட்டுள்ளன. இந்த தங்க ஆணிகள் மனித உடலில் உள்ள நாடி நரம்புகளைக் குறிக்கக்கூடியது.
ஒன்பது கலசங்கள் பொற்கூரையின் மேல் உள்ளது.
கால வெள்ளத்தின் நடுவே வாழ்கின்ற (காலக் கணக்கின்படி அமைந்த கோபுரங்களுக்கு உள்ளே நுழைந்து),
பஞ்சகோசங்களால் பகுக்கப்பட்ட (ஐந்து பிரகாரங்களையும் கடந்து)
உடல் - உயிர் கொண்ட ஆன்மா (சித்ஸபையில் நடமிடக்கூடிய) நடராஜப் பெருமானைக் காண்பதே மோட்சம் தரும் காட்சியாகும்.
சித்சபையில் மேலேற ஐந்தெழுத்தான நமசிவய எனும் மந்திரங்களே ஐந்து படிகளாக அமைந்துள்ளது.
அங்கிருந்து பார்த்தோமானால், இயற்கையான ஒளி வெள்ளத்தில், ஜ்வாஜ்ஜல்யமான காட்சி புலனாகின்றது.
24 தீ ஜ்வாலைகள் கொண்ட திருவாசி.
அந்தத் திருவாசியின் நடுவே நடராஜப் பெருமானின் ஆனந்த நடனக் கோலத்தைக் காண்கின்றோம்.
பனியால் நனைந்த ஜடை. கயிலை மலையிலிருந்து நேராக வந்தாரல்லவா? அந்தப் பனி இன்னும் காயக் கூட இல்லை. நனைந்தே இருப்பதால் பறக்கும் நடன இயக்கத்திலும் விரியாத செஞ்சடை கொண்டிருக்கின்றார்.
சடையில் கங்கையும், சந்திரகலாபரணமும் அலங்கரிக்கின்றார்கள்.
சந்திரனைப் பழிக்கும் வகையில் அமைந்த நெற்றி. அதன் நடுவே நெற்றிக்கண். பூவின் நடுவில் ஒரு பூப்பூத்தது போன்ற மலர்ந்த முகம். நன்றாக நாணேற்றப்பட்ட வில் போன்ற அழகுற அமைந்த புருவங்கள். செழுமையான கன்னங்கள். தரிசனம் செய்வோரைத் தனிப்பட்ட முறையில் பார்க்கின்றாரோ, நம்மை மட்டும்தான் பார்க்கின்றாரோ என்று எண்ணக் கூடிய வகையில் சற்றே சாய்ந்த தலை. புன்சிரிப்பு கொண்ட உதடுகள். உடுக்கை கொண்ட கையிலிருந்து தான் சத்தம் எழுகின்றதோ என உணரவைக்கும் வலக்கை. இடக்கையிலிருக்கும் தீயின் ஒளி மேலும் சித்சபையை பிரகாசமாக்குகின்றதோ என ஐயுறவைக்கும் தோற்றம். அழகான ஆபரணங்கள் அம்பலவாணனுக்குச் சாற்றப்பட்டதால் மேலும் அவை அழகுபெறுகின்றன. அதிலிருக்கும் பிரம்ம கபால மாலை எழில் கொஞ்சுகின்றது.
(இந்த பிரம்ம கபால மாலை - நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின் தலைப் பாகம் மட்டுமே இருக்கும். மொத்தம் 32 முகங்கள் இருக்கும். புராணங்கள் கூற்றுப்படி, 32 பிரம்மாக்களே ஒவ்வொரு கல்பத்திலும் (காலக் கணக்கு) மீண்டும் மீண்டும் உயிர்பெறுவார்கள். நடராஜரின் தலையில் உள்ள சந்திரனிலிருந்து அமிர்த தாரை (அமுத நீர்த்துளி) பட்டு, ஒவ்வொரு பிரம்மாவாக உயிர்ப்பிக்கின்றது. ஒரு பிரம்மா இறக்க, அடுத்திருக்கும் பிரம்மா அமிர்த தாரையால் உயிர் பெற்று படைப்பைத் தொடங்குகிறார். இதுவே சுழற்சி முறையில் இயங்குகின்றது. - குஞ்சிதாங்கிரிஸ்தவம் - 130வது ஸ்லோகம்)
சூர்யனின் ஒளியையும் மிஞ்சும் தாடங்கம், காதுகளில் தோடுகள். (பக்தர்களின் வேண்டுதல்களைக் காது கொடுத்துக் கேட்பதால் அவர் தோடுடைய செவியன்)
மார்பகம் முழுக்க மறைக்கும்படியான சிவசிவ பதக்கம். நமசிவய பதக்கம். தங்க மேனியை விலை மதிப்பில்லா கற்கள் கொண்ட பதக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு அலங்கரிக்கின்றன.
முயலகன் எனும் அரக்கன் மேல் ஊன்றிய திருப்பாதம் நிலைகொள்கின்றது. வலிமை வாய்ந்த கால்களில் வீரகண்டாமணி எனும் அணி அழகு செய்கின்றது. அந்த அரக்கனும் ஆட்டத்தைக் காண முயல்கின்றானோ என்றே தோன்றுகிறது.
தூக்கிய திருவடி. குஞ்சிதபாதம். என்னே மென்மையான பாதம். வளைந்து நெளிந்து ஒரு குழைந்தையின் மென்மையான பாத ஸ்பரிசத்தை அத்திருப்பாதத்திலிருந்து கண்டு உணரமுடிகின்றது. தூக்கிய திருவடியில் அழகிய வைரங்களால் இழைக்கப்பட்ட மணி ஒன்று உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
ஆஹா !
கண்டோம் காட்சியை ! பெற்றோம் மோட்சத்தை !!
பக்தியால் மெய்மறக்க, கண்கள் பணிக்க, உள்ளம் துள்ள, கைகள் பணிய, எந்த ஜென்மத்தில் செய்த பெரும் புண்ணியமோ, இந்த ஜன்மத்தில் நடராஜரைக் காண முடிந்தது !
ஆனந்த நடனமிடும் நடராஜப் பெருமானைக் காண்போம் !
ஆனந்த வாழ்வு பெற்றிடுவோம் !!
மீண்டும் பிறவாத நிலையான முக்தி எனும் மோட்ச நிலையைப் பெற்றிடுவோம் !!!
வேறு சில கூற்றுக்களின் படி,
நான்கு கோபுரங்களும் நான்கு யுகங்களாக அமைந்திருக்கின்றன.
கோபுரத்தின் ஏழு நிலைகளும் ஏழு பிறவிகளைக் குறிப்பன.
ஒரு ஆன்மா ஏழு பிறப்புகளுக்குப் பிறகுதான் மோட்சம் சென்றடையும் என்று புராணங்கள் கூறுகின்றன.
தமிழ் நால்வரில் ஒருவரான அப்பர் சுவாமிகள், சிதம்பரம் வந்து தரிசித்தால் மோட்சம் கிடைத்துவிடும் ஆகையால், நடராஜரின் திருவடி தரிசனத்தைக் காண வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் என்றே மன்றாடுகின்றார். (குனித்த புருவமும் .... மனித்தப் பிறவியும் வேண்டுவனே இம் மாநிலத்தே)
நடராஜப் பெருமானின் திருமுகம் மட்டுமே, விருந்தோம்பும் குணத்தோடு "என்று வந்தாய் எனும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே" - என்று வந்தாய், எப்படி இருக்கின்றாய் என்று உள்ளம் குழைய கேட்பது போல உள்ளது என்கின்றார்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- 94434 79572
- yanthralaya@yahoo.co.in
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?), கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை), கலிதோஷத்தினை நீக்கிய கணிதம் (கால கணிதம் - 4), மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5 - மோட்ச தீபம்)
Tuesday, May 11, 2010
மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5 - மோட்ச தீபம்)

- yanthralaya@yahoo.co.இன்
Monday, May 3, 2010
கால கணிதத்தின்படி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது கலியுகம்.
சிறப்புப் பெற்ற கணிதத்தை அறிந்து கொண்டதால் வாழ்வில் சிறந்த ஒரு காவிய நாயகனின் வரலாற்றில் நடந்த சம்பவத்தை இங்கு காணவிருக்கின்றோம்.
கணிதம் கற்றதால், கலி விலகியது !
சுருக்கமாக நள சரித்திரம் :
நளனுக்கு அச்வ (குதிரை) சாஸ்திரம் நன்கு தெரியும். ஆகையால் குதிரைகளின் காதில் மந்திரம் ஓதினான். தன் மனைவியின் சுயம்வரத்திற்காக மற்றொருவனை தேரில் ஏற்றி மாமன்னனாகிய நளன், ரதத்தைச் செலுத்துகின்றான். வாயு வேகத்தில் தேர் பறக்கின்றது. ரிதுபர்ணன் இதுவரை காணாத வேகத்தைக் காண்கின்றான். அரசனின் உத்தரீயம் எனும் மேல் துண்டு ரதத்தின் வேகத்தால் பறந்து விழுகின்றது.
ரிதுபர்ணன் ரதசாரதியாகிய நளனாகிய வாகுகனைக் கூப்பிட்டு, "துண்டு விழுந்துவிட்டது, எடுக்க வேண்டும்" என்று கூறுகின்றான். இதைக் கூறி முடிக்கும் முன்பே ரதம், விந்தை மிகு வேகத்தால், பல காதம் (பல கிலோமீட்டர்கள்) கடந்துவிட்டது. ஆச்சர்யம் அடைந்த அரசன் தன் தேரோட்டி சாதாரணன் அல்ல, அவனிடம் வித்தை இருக்கின்றது எண்ணி, வாகுகனைப் பணிந்து வணங்கி, தேரினை வேகமாக செலுத்த உதவும் அஸ்வ சாஸ்திரத்தைப் போதிக்கக் கேட்கின்றான். அதற்குப் பதிலாக தான் வல்லமை பெற்ற விருக்ஷ (மரம்) சாஸ்திரம் என்ற கணித சாஸ்திரத்தை நளனுக்கு அறிவிக்கின்றான்.
விருக்ஷ சாஸ்திரம் என்பது ஒரு மரத்தைப் பார்த்த உடனேயே அதில் எத்தனை இலைகள், கிளைகள், காய்கள், கனிகள், பூக்கள் என்பனவற்றை உடனடியாக அறியும் ஒரு அற்புதக் கணிதக் கலை. தற்காலத்தில் மைக்ரோசா•ப்ட் பில்கேட்ஸ், விப்ரோ (மைண்ட் ட்ரீ) ஆசிப் ப்ரேம்ஜி, இன்•போசிஸ் நாராயண மூர்த்தி போன்றோர்கள் பெரும் செல்வம் கொண்டமைக்கு ஒரு பெரும் காரணம், கணிதம் அறிந்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கணிணியே காலத்தை வெல்லும் காரணியாக (கால கணிதத்தையும்) அறிந்து அதில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்கள்.
உபரி தகவல் :
அந்த அழகிய பதக்கம் இன்றளவும் ஆனித் திருமஞ்சன உத்ஸவத்திலும், மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவத்திலும் "நள சக்கரவர்த்தி பதக்கம்" எனப் போற்றப்பட்டு, ஸ்ரீமன் ஆனந்த நடராஜ மூர்த்திக்குச் சாற்றப்படுகிறது.
அடுத்த பதிவில், கால கணிதப் படி அமைந்த ஆலயத்தின், "மோட்சம் தரும் காட்சி"யைப் பற்றி காண்போம்.
- நி. த. நடராஜ தீக்ஷ¢தர்
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?), கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)