பனிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கியவர் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள். இவள் எழுதிய பாடல்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.
அக்குழந்தையை பெரியாழ்வார் கண்டெடுத்து, கோதை என பெயர் சூட்டி, (கோதை என்றால் தமிழில் மாலை என்றும் பொருளுண்டு) தமிழையும், கிருஷ்ண பக்தியையும் ஊட்டி, அருமையுடனும், பெருமையுடனும் திருமகள் போல (பெரியாழ்வார் திருமொழி 3) வளர்த்து வந்தார்.
ஆண்டாளின் திருப்பாவையில் பெண்மையின் குணங்களும், மென்மையும், நளினமும் நிறைந்திருக்கிறது.
காக்கைப்பாடினியார், காரைக்காலம்மையார் போன்ற பெண் புலவர்கள் எழுதியது இலக்கியமும், பக்தியும் சேர்ந்தது.
ஆனால், ஆண்டாளின் பாடல்களின் கண்ணனை மட்டுமே அடைய வேண்டும் என்ற வேட்கையில் பாடும் பாடல்களில் காதலும் கவினுற சேர்கின்றது.
ஜெயதேவர் தன் அஷ்டபதியில் நாயகன் நாயகி பா(ba)வனையில் எழுதியிருந்தாலும், ஆண்டாள் - ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து பரமனைக் காதலால் பாடுவது அருமையாக அமைகின்றது.
பரந்தாமனிடம், பெரியாழ்வார் - ஆண்டாளை ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஊரார், உறவினர்கள் அனைவரையும் சாட்சியாக நிறுத்தி, தாங்கள் ஏற்க வேண்டும் என்று - ஒரு பெண்ணின் தந்தையின் ஸ்தானத்தில் நின்று வரம் கேட்கிறார். அவ்வண்ணமே "சொன்னவண்ணம் செய்யும் பெருமாள்" அருள்பாலிக்கின்றார்.
அந்த நாளும் வந்தது. ஊரார், உறவினர் அனைவரும், ஆண்டாளை அலங்கரித்து வந்து பெருமானிடம் சேர்க்க வருகின்றனர். நேரம் போய்க்கொண்டேயிருக்கின்றது, ஆனால் பெருமானைக் காணோம்.
இனியும் பொறுக்க மாட்டாத ஆண்டாள், கருடாழ்வாரை மனமுருக பிரார்த்தனை செய்து, 'பரந்தாமனை உடனே அழைத்துவந்தால், எங்கள் அருகிலிருக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டு' என்று வேண்டுகிறார்.
கருடாழ்வார் மறுகணமே பெருமானிடம் சென்று, இனி ஒரு கணம் தாமதித்தாலும் ஆண்டாள் உயிர் பிரிவாள் என எடுத்துச் சொல்ல, பரந்தாமன் கையில் செங்கோல் ஏந்தி, ரங்கமன்னனாக, இன்முகத்துடன் ஆண்டாளை கரம் பிடிக்கின்றார். (ஸ்ரீ வில்லிப்புத்தூர் புராணம்)
மார்கழி மாதத்தில் தக்க கணவனை அடைய பாவை நோன்பு காப்பது பெண்களின் பழங்கால விரதங்களில் ஒன்று.
ஆண்டாளின் திருப்பாசுரங்கள் நம்மை ஆண்டுகொள்ளும். நம்மை தெய்வ ஸந்நிதானத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் அமைந்தது.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
அவளின் பெண்மை சார்ந்த பாடல்கள் அனைவரையும் மயக்கக் கூடியவை.
lateral thinking வகையைச் சேர்ந்தவை ஆண்டாளின் பாடல்கள்.
திருப்பாவையின் முதல் பாடல் "மார்கழித் திங்கள்... கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ... பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்".
ஒவ்வொரு வார்த்தைக்கும் எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன.
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்" - ஆயர்குலத் தலைவராகிய நந்தகோபர் மிகவும் சாதுவாக விளங்கியவர்.
அவரை ஏன் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று ஆண்டாள் சொல்லவேண்டும்? நந்தகோபர் ஒரு எறும்பைக் கண்டால் கூட அதற்கு இம்சை தராமல் இருக்க விருப்பப்படுவாராம். அந்த பரமசாதுவான நந்தகோபர் கண்ணனைத் தூளியில் வைத்து ஆட்டும்போது, தந்தைப் பாசம் மிக்கவராய், ஒரு எறும்பு கூட கண்ணனைத் துன்புறுத்தக் கூடாது என நினைப்பாராம்.அதுவும் எப்படி, தூளியின் கீழே ஒரு எறும்பைக் கண்டால் கூட, அதை, சிங்கத்தை எதிர்க்கவல்ல கொடும் நுனியுள்ள கூரான வேல் கொண்டு, அந்த எறும்பை, தன்னை எதிர்க்க வரும் சிங்கத்துடன் எப்படிப் போராட முனைவாரோ அது போல எறும்பினை தாக்க விழைவாராம். எப்படிப்பட்ட கற்பனை?
அக்காரவடிசல் செய்யும் முறை :நன்றி : ஸ்ரீ தேசிகன்
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 ஆழாக்கு
கடலைப் பருப்பு- 1/2 ஆழாக்கு
பயத்தம் பருப்பு- 1/2 ஆழாக்கு
நெய்- 1 கிலோ
கொதிக்கவைத்த பால்- 4 லிட்டர்
வெல்லம்- 1 கிலோ
முந்திரிப்பருப்பு- தேவையான அளவு
கிஸ்மிஸ்- தேவையான அளவு
ஜாதிபத்திரி- 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர்- அரிசியை வேகவைக்க
செய்முறை:
முதலில் அரிசியை 200 கிராம் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அத்துடம் கொதிக்கும் நீர் மற்றும் பாலை சேர்க்கவும். அதே நேரத்தில் இன்னொரு வாணலியில் 1 ஆழாக்கு நெய்விட்டு இரண்டு பருப்புகளையும் வறுத்து அரிசிக் கலவையுடன் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வேகும்வரை அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி வேகவைத்த கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.மிச்சமிருக்கும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாக வறுக்கவும். ஜாதிபத்திரியையும் சேர்த்து வறுத்து சாதக் கலவையின் மேலே கொட்டிக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும். [இந்தச் செய்முறை ஸ்ரீ அஹோபில மடம் திருமடைப்பள்ளி தலைமைப் பரிசாரகர் திரு. அப்பு என்பவரால் வழங்கப்பட்டது. கல்யாணவரதன் என்ற பெயருடன் பிரபலமாக ‘அப்பு மாமா’ என்று அறியப்படும் இவர் அஹோபில மடத்தில் தன் 14வது வயதில் சேர்ந்தார். தற்சமயம் தன் எழுபதுகளில், அஹோபில மடத்தில் தலைமைப் பரிசாரகராக இருக்கும் இவர், சமையல் குறிப்புகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.]
kootaaraivalli, koodaraivalli, kudaraivalli, koodarai vellum, kootarai valli, koodaarai valli, koodarai valli, akkaravadisal, akkaraivadisal, akaravadisal, akkaraivadisal.
பாவை நோன்பு நூற்பொம்.
(ஞானஒளி ஆசிரியர் ஸ்ரீ ரங்கநாதன் அவர்கள் அளித்த கட்டுரை)
ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.
சூடிக்கொடுத்த
சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு. - உய்யக்கொண்டார் பாடல்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
என்னும் வராக க்ஷேத்திரத்தில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் அவதரித்தார். ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அவரின் நந்தவனத்தில்,
"பஞ்சவர்ஷா திவ்ய ரூபா திவ்யாபரண பூஷிதா, நீலோத்பலதள ச்யாமா திவ்யாம்பர ஸமாவ்ரதா"
என்ற ஸ்தலபுராணத்தின்படி, ஒளி வீசும் முகத்துடனும், அழகே உருவாக, திருத்துழாய் எனும்
துளசிச் செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள். நள வருஷம் ஆடி மாதம் சுக்ல
பக்ஷ சதுர்த்தசியில் பூரம் நக்ஷத்திரத்துடன் கூடிய செவ்வாய் கிழமை அன்று துளசி வனத்தில்
உதித்த அவளுக்கு கோதை என்று பெயரிட்டார். கோதை என்றால் மாலை என்று பொருள்.
குழந்தை
முதலே கோதை கண்ணன் மீது பெரும் பக்தி கொண்டாள். அந்த பக்தி நாளாக நாளாக கண்ணன் மீது
காதலாக மலர்ந்தது. எங்கு நோக்கிலும் கண்ணனின் திருவுரு தெரிவது போலவே மனம் மாறினாள்;
விண்ணின் நீலம் கண்டால் அது கண்ணனின் நிறம் என்பாள்; அழகு மலரைக் கண்டால் அது கண்ணனின்
கண் என்பாள். கண்ணனையை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்றே காலம் நகர்த்தினாள். வாரணம்
ஆயிரம் சூழ வலம் வந்து என்ற பாடல் மூலம் ஆயிரம் யானைகள் சூழ, உறவினர்கள் புடை சூழ கண்ணனை
திருமணம் புரிய வேண்டும் என்று கனவு காண்கின்றாள்.
பெரியாழ்வார்
பெருமாளுக்குத் தொடுத்துக் கொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணடியில் அழகு
பார்த்து, இது பெருமாளுக்கு உகந்ததாக இருக்கும் என்று தோன்றியபிறகுதான் மாலையைக் கொடுத்தனுப்புவாளாம்.
ஒரு நாள் இதை பெரியாழ்வார் பார்த்துவிட்டு மிகவும் வேதனையுற்று மாலையைத் தானே எடுத்துகொண்டு
போனபோது பெருமாள் கோதை கொடுக்கும் மாலையைத்தான் அணிவேன் என்று கூறினார்.
பெரியாழ்வார்
வியந்து, ‘நம் பெண் மானிடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமித்
தாயாராக இருக்கலாம்’ என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, “நீ யாரை மணம் செய்துகொள்வாய்” என்று தந்தை பெரியாழ்வார்
வினவ, அவள்
வானிடை
வாழும் அவ் வானவர்க்கு
மறையவர்
வேள்வியில் வகுத்த அவி
கானிடைத்
தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும்
மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை
ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து
எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக்
கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன்
கண்டாய் மன்மதனே.
என்று
சொல்லிவிட்டாள். ஸ்ரீ அரங்கனாதனைத்தான் மணம் புரிவேன் என்றாளாம். இது எப்படி சாத்தியம்
என்று பெரியாழ்வார் நினைக்க பெருமாளே அவர் கனவில் வந்து கோதையைத் திருவரங்கத்திற்கு அழைத்து வா என்று உத்திரவு இட்டார்.
ஆழ்வாரும் அப்படியே செய்ய, கோதை பகவானிடம் ஐக்கியமாகி மறைந்துவிட்டாள். இது நடந்தது
பங்குனி உத்திரத்தன்று.
தெய்வத்தை
மணக்கும் பெண் தெய்வீகம் பொருந்தியிருக்க வேண்டும். மானிடருக்குப் பிறந்தவளாக இருக்கக்கூடாது
என்ற சீரிய எண்ணத்தில் ஜனக மஹாராஜா சீதையை பூமியில் கண்டெடுக்கப்பட்டதுபோல் கண்டெடுக்கப்படுகிறாள்.
‘நாச்சியார் திருமொழி’யில் வரும் பாடல்கள் அனைத்தும் திருமாலை விரும்பி அவருடன் ஐக்கியமாகிவிடும்
இச்சையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்கள். எப்படியாவது என்னைத் திருமாலிடம் சேர்த்துவிடு
என்று காமதேவனை வேண்டிக்கொண்டு நோன்பெடுக்கும் பாடல்களில் துவங்குகிறது நாச்சியார்
திருமொழி. அதன்பின் கண்ணனின் லீலைகளில் திளைக்கும் பாடல்கள்; தரையில் வட்டம் வரைந்து
அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற கவிதைத்தனமான விருப்பங்கள்; மேகங்களையும்
குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலைப் பற்றி பேசுவது;வாரணமாயிரம்
சூழ வலம் செய்யும் கல்யாணத்தைக் கனவு காண்பது; அவன் ஆடையைக் கொண்டு என்மேல் வீசுங்கள்,
அவன் திருத்துழாயை என் குழலில் சூட்டுங்கள், அவன் மாலையை என் மார்பில் புரட்டுங்கள்,
அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள்,
அவன் அடிப்பொடியை என் மேல் பூசுங்கள்; இப்படி ஆண்டாள் பாசுரங்கள் அனைத்தும் அமைந்திருக்கிறது.
ஆண்டாளின்
திருப்பாவையிலுள்ள முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக்
காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் மாண்பினையும், நோன்பு இருந்தால் மாதம்
மும்மாரியும், நல்வாழ்க்கையும் கிடைக்கும் என்பதும் விபரமாக இருக்கிறது. ஆண்டாளின்
பாடல்கள் இயற்றரவிணை கொச்சகக்கலிப்பா என்று சொல்கின்றார்கள். மிகக் கடினமான யாப்பு
வகையைச் சேர்ந்தது. ஒரு பெண் அந்தக் காலத்தில் இப்படி யாத்தது மிகவும் ஆச்சர்யம் அளிக்கின்றது.
ஆண்டாள் அருளியது திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி. ஆண்டாளின் திருப்பாவையில்
பெண்மையின் குணங்களும், மென்மையும், நளினமும் நிறைந்திருக்கிறது. காக்கைப்பாடினியார்,
காரைக்காலம்மையார் போன்ற பெண் புலவர்கள் எழுதியது இலக்கியமும், பக்தியும் சேர்ந்தது.
ஆனால், ஆண்டாளின் பாடல்களின் கண்ணனை மட்டுமே அடைய வேண்டும் என்ற காதல் வேட்கையில் பாடும்
பாடல்களில் காதலும் கவினுற சேர்கின்றது.
ஜெயதேவர்
தன் அஷ்டபதியில் நாயகன் நாயகி பா(ba)வனையில் எழுதியிருந்தாலும், ஆண்டாள் - ஒரு பெண்ணின்
கோணத்திலிருந்து பரமனைக் காதலால் பாடுவது அருமையாகவும் இயற்கையாகவும் அமைகின்றது.
திருப்பாவை
நமக்கு நினைவூட்டுவது மார்கழி மாதத்தில் வரும் பாவை நோன்பு . இளம் சிறுமியர், மார்கழி
மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, குளிர்ந்த ஆற்று நீரில் நீராடி,
ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி வழிபடுதல் பாவை நோன்பின் சிறப்பு அம்சம். இந்த மாதத்தின் முப்பது நாட்களில் செய்யும் நோன்பிற்குப்
பின் சில அறிய கருத்துக்கள் புதைந்துள்ளன. சந்தோஷமும் வளமும் மிக்க வாழ்க்கையை வேண்டியும்
பகவானிடம் சரணாகதி அடைந்து அவனைச் சேர்ந்தடைவதும் சிறுமியர்களின் பிரார்த்தனை. எல்லோரும் இன்புற்று இருக்க வானம் மாதம் மும்மாறி
பொழிய வேண்டும் என்ற பிரார்த்தனையும் செய்யப்படுகிறது..
பகவான்
ஸ்ரீ கிருஷ்ணர் " மாஸாநாம் மார்கசீர்ஷ:" என்று மாதங்களில் மார்கழி என் ஸ்வரூபம்
சொல்லியுள்ளார். மாஹாபாரத காலத்தில் மார்கழிதான் முதல் மாதம்.
(
அனு. பர்வம் 106,109), ஆகவே மாதங்களில் முதலானது இந்த மார்கழி மாதம். இந்த மாதத்தில் செய்யப்படும் விரதங்கள், ஹோமங்கள்
எல்லாம் சிறந்த பலனளிக்கும் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. ஸ்ரீ மத் பாகவத்தில் ஒரு ஸ்லோகம் :
"
ஸூக்லே மார்கஸிரே பக்ஷே யோக்ஷித்பர்துரநுஜ்ஞயா
ஆரபேத வ்ரதமிதம் ஸார்வகாமிகமாதித ||
"
முதன்
முதல் மார்கழி சுக்ல பக்ஷத்தில் தன் கணவன் அநுமதி பெற்றுக்கொண்டு மனைவி எல்லா விருப்பங்களையும்
தரவல்ல விரதத்தை ஆரம்பிக்கவேண்டும் என்பது
பொருள்.
கோகுலத்தில், யமுனை நதிக்கரையில் காத்தியாயினி தேவியின் பாவை செய்து சிறுமிகள் நோன்பு
நூற்றதாக பாகவதம் கூறுகிறது. கோபிகள் கண்ணனைத்
தன்
கணவனாக அடைய ஏங்கினார்கள் என்று பாகவதம் கூறுகிறது.
தென்னாட்டில், கண்ணனை மையமாகக் கொண்டு சிறுமிகள் , குழந்தைப் பருவத்தில்,
நோன்பு கடைப்பிடிக்கிறார்கள். கண்ணனைப் பதியாக அடையவேண்டி இருக்கும் விரதமே இது. இன்னும்
எத்தனைப் பிறவி எடுத்தாலும் கண்ணனையே கணவனாக அடையவேண்டும் என்று பாடுகிறார்கள். பரமாத்மாவையே
கணவனாக
அடைய
விரும்பும் சிறுமிகளின் ஆர்வமும் ஏக்கமும் தெளிவாகக் காணப்படுகிறது. ஜீவாத்மா-பரமாத்மா
ஐக்கிய நிலையை அடைவதே மார்கழி நோன்பின் குறிக்கோள்
என்பது
தத்துவார்த்தம் என்றாலும், இகத்தில் பெண்களின் இனிமையான கல்யாண வாழ்க்கை அமைவதற்கு
திருப்பாவை ஓதுதலும், பாவை நோன்பும் அவசியம். இதைத்
தவிர,
வரும் வருஷத்தில் மாதம் மும்மாறி மழை பெய்து, பயிற்களும் தாவர இனங்களும் வளர்ந்து பசு,
மனிதன், மற்ற ஜீவர்களும் வளமுடன் வாழ கடவுளை
வேண்டிக்கொள்ளும்
உயரிய நோக்கத்தைத் தன்னகத்தே கொண்டது இந்நோம்பு, " நாடெல்லாம் தீங்கு இன்றி இருக்கும்;
மாதம் மும்மாறி பெய்யும் ;செந்நெல் சிறப்பாக
விளையும்;
பசுக்கள் நிறைய பால் கறக்கும்; அங்கும் செல்வம் நிறையும் " என்று மூன்றாம் பாடல்
சொல்கின்றது.
ஸத்குரு
ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ஒரு தடவை திருப்பத்தூர் சென்றபோது கோமதி மார்கபந்து என்னும்
பக்தை "வாரணமாயிரம்" என்று தொடங்கும்
ஆண்டாள் திருக்கல்யாண பாசுரங்களைப் பாடினார்.
ஸ்வாமிகள் மனமகிழ்ச்சி அடைந்து சொன்னதாவது :" இந்தப் பாசுரங்களை எல்லோரும்
பாராயணம் செய்யலாம். முக்கியமாக, கன்னிப் பெண்கள் இதைப் பக்தியுடன் பாடினால், அவர்களுக்குக்
கல்யாணப்ராப்தி கண்ணன் அருளால் கிடைக்கும் ". நாச்சியார் திருமொழியில்,
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண
நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண
பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம்
நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
கோவிந்தனாகிய
காளைவரக் கனாக்கண்டேன்
என்று
தொடங்கும் பாடல் பிரசித்தம்.
“நாங்கள்
நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்ன பயன் என்று ஆரம்பித்திலேயே ஆண்டாள் தெரிவிக்கிறாள்.
அதன் பயன், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தல்” என்பதே. பாவை நோன்பிருந்தால்
மாதம் மூன்று முறை மழை பொழியும்.
நான்காவது
திருப்பாவையில் மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள்
அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.
ஆழி
மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள்
புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி
முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை
பற்பநாபன் கையில்
ஆழிபோல்
மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே
சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ
உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி
நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
வருண
தேவனே சிறிதும் கைகரவேல். சமுத்திரத்தினுள்ளே புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு இடிஇடித்து
ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்மநாபன் கையில் உள்ள
சக்கரம் போல மின்னலடித்து அவனுடைய சங்கம் போல அதிர்ந்து முழங்க அவனுடைய சக்கரத்தால்
சிதறப்பட்ட சரங்கள் போல மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ நாங்களும் அந்த மழையில் நனையப்
பொழிவாயாக. இது ஆண்டாளின் விஞ்ஞானப் பார்வை.
வசிஷ்டர்,
காஷ்யபர் போன்ற முனிவர்கள் சொன்ன ஒரு கருத்து, பின்னாளில், வராஹமிஹிரரால் மனித குலம்
அறியும்வண்ணம் எழுதி வைக்கப்பட்ட ஒரு கருத்து-
மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள்,
ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச்
சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான்,
சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள்
– அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும்
இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.
மூவகையில்
கவனிக்கப்படும் இயற்கைச் சூழ்நிலையில், முதல் வகை மேலே கூறப்பட்ட வைகறைப் பொழுதின்
சலசலப்புகள். நீர் சம்பந்தப்படும்படி, விடியலுக்கு முன்னரே வாசல் தெளித்துக் கோலமிடுவதும்
இதில் அடக்கம். மக்கள் கூட்டத்தையும் சேர்த்து உயிரினங்கள் பலவும் வைகறைக் குளிரை வெப்பப்படுத்த
வேண்டும். நடமாடுவதன் மூலமும் நீரை அளைப்பதன் மூலமும் ஓசையின் மூலமும் இது செய்யப்படுகிறது.
மக்கள் தொகுதியைப் பொருத்த மட்டில், காவலும் கண்டிப்பும் இல்லாத நிலையில் கூவித் திரிந்து
விளையாடும் இளம் சிறுமியரின் பொம்மை விளையாட்டும், மணல் விளையாட்டும், ஆற்று நீராட்டமும்
இந்த இயற்கைச் சூழலுக்கு ஒத்துப் போகின்றன. இதனால்தான், பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும்
வண்ணம் விளையாட்டாக இந்த நோன்பினை முனிவர்கள்அமைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இரண்டாவது
வகை, காற்று மண்டலம், மேகக்கூட்டம், வைகறையின் வண்ணங்கள் முதலியன. கீழ் வானம் வெள்ளென்று
இருக்கும் நிலையை ஆண்டாள் சொல்வது,(பாசுரம் 8 ) முக்கிய இயற்கைக் குறிப்பு. மார்கழி
மாதம், விடியல் நேரத்தில் வானம் வெண்ணிறமாக இருக்க வேண்டும், மாறாக சிவந்து இருந்தால்
மாரிக் கால மழை ஓரளவேனும் அடிபடும் என்று அறியப்பட வேண்டும். சிவந்த விடியல் வானம்
தை, மாசி மாதங்களில் நல்லது. ஆனால் மார்கழியில் வைகறை வானம் தூய்மையாய், வெண்ணிற மலர்
போல இருக்க வேண்டும் என்பது முனிவர்கள் கருத்து. காற்று மெலிதாக வீச வேண்டும். மெல்லிய
மேகக் கீறுகள் வானில் தென்பட வேண்டும். முக்கியமாக பனிப் படலம் கூடாது. தை பிறந்தபின்
பனி வர வேண்டும். மார்கழியில் அல்ல. தற்சமயம், நம் நாட்டின் பல பகுதிகளில் பனிப் படலம்
தென்படுவது, அடுத்த மழைக்காலம் குறைவுடையது என்பதை முன்கூட்டியே காட்டும் ஒருகாலம்-
காட்டி.
மூன்றாவது
வகை வான்வெளியில் உள்ள கிரக அமைப்புகள். ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ (பாசுரம்
13 ) என்று ஆண்டாள் கூறியது சாதாரணச் செய்தி அல்ல. மார்கழி மாத சூழ்நிலை வகை தெரிந்துதான்
அவள் ஒவ்வொன்றையும் பாடியிருக்கிறாள். மார்கழி விடியல் நேரத்தில், ஒரு கிரகம் உதித்து,
மற்றொரு கிரகம் அஸ்தமனம் அடைவது விண்வெளி குறித்த நல்ல காரணியாகும். வரப் போகும் மாரிக்
காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்-காட்டி. கிரகங்கள் நீச்சமடையாமல்
இருப்பதும், கிரக யுத்தம் என்று சொல்லும்படி கிரகங்கள் கூடி இல்லாமல் இருப்பதும், கிரஹணங்கள்
ஏற்படாமல் இருப்பதும், அடுத்த மாரியின் வளப்பமான பொழிதலை உறுதிப்படுத்துவது ஆகும்.
தற்சமயம்
மார்கழியில் இருக்கும் இம்மூவகை நிலையை எண்ணிப்பார்த்தே, அடுத்த ஆண்டின் மழை எப்படி
இருக்கும் என்று வாசகர்கள் கணித்துவிடலாம். இந்த் வகையில் கணித்தவர்கள்தான் நம் தமிழ்
முன்னோர்.
பாவை
நோன்புக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு அறிந்த நம் முன்னோர், சரியான காலத்தில், சரியான
அளவில் மழைக் காலம் தொடங்கி விட்டது என்று திருப்திபடுவதுடன் அல்லாமல், அடுத்த மார்கழியையும்
சரியாகவே வரவேற்போம் என்று வரவேற்றனர். பாவை நோன்பைப் பற்றி பரிபாடல் பாடியுள்ள ஆசிரியர்
நல்லந்துவனார், ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் கோள்கள் நிலை சொல்லி, இவ்வாறு அமையப்
பெறவே, சைய மலையின்கண் மழை துவங்கும் என்பது உறுதி என்னும் விதிப்படி, மழை பெய்யலாயிற்று
என்றார். அதனுடன் நில்லாமல், அதற்கடுத்த மார்கழியில், எவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் பாவை
நோன்பிருந்தனர் என்றும் விவரிக்கின்றார். ( தகவல் - ஜெயஸ்ரீ சாரநாதன் ,"தமிழ்
ஹிந்து ")
5வது
பாசுரத்தில் ஆண்டாள் சொல்கிறாள் - நம் பாவங்கள் எல்லாம் நெருப்பில் பட்ட பஞ்சு போல
தூசாகும். 21வது பாசுரத்தில் விரோதிகள் பலமிழந்து உன்னைச் சரணடைகிறார்கள் என்பது நம்முள்
உறைந்திருக்கும் காம்க்ரோத உட்பகையைக் குறிக்கின்றது. " எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ
ரெம்பாவாய்" என்ற 22வது பாடலில்
பாவங்களைப்
போக்குமாறு வேண்டுகிறார்கள்.
பகவானின்
அவதாரங்களை விவரிக்கும் பாசுரங்கள் - 1 (கண்ணன்), 6 ( நாராயணன்), 7 (கேசவன்), 9 ( மாதவன்,
வைகுந்தன்), 12 (ராமன்), 24 (வாமனர் ), 27 (கோவிந்தன்).
சூரியன்
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதத்தில் இருக்கும்போது மார்கழி மாதம் என்றும், உத்திராடம்
1ம் பாதத்தைக் கடந்து 2ம் பாதத்திற்கு செல்கின்றன நாள் மகர ஸங்கிரமனம் அல்லது உத்திராயனம்
என்று அழைக்கிறோம். மார்கழி மாதத்தில்தான் விஷ்ணு, சிவன் சம்பந்தமான பண்டிகைகள் வருகின்றன. ஸ்ரீ தத்த ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்,
ஐயப்ப - சபரி மலை- விரதம் என்பவையெல்லாம் மார்கழியில்தான்.
சூரியன்
மூலா நக்ஷத்திரத்தைக் கடப்பது வானியலில் (Astronomy ) ஒரு முக்கியமான உண்மையைச் சுட்டிகாட்டுகிறது.
மூலம் star பால் வீதியின் மையத்தின் திசையில் உள்ளது ( Moolam star is in the
direction of the centre of the galaxy,
the ksheera sagara or milky way ). வைஷ்ணவர்கள்
, ஸ்ரீ மஹா விஷ்ணு க்ஷீர சாகரத்தில் இருப்பதாலும் மூலா நக்ஷத்திரத்தில் இருக்கும் சூரியன்
மஹா விஷ்ணு இருக்கும் திசையாகிய வைகுண்டத்தைக் காட்டுவதாலும், இந்த மாதத்தில் வரும்
ஏகாதசியை முக்தி தரும் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
ஸ்கந்த
புராணத்தில் ஆருத்ரா தரிசனத்தைப் பற்றிய விவரத்தைக் காணலாம். ஆருத்ரா நக்ஷத்திரத்திற்குத்
தேவதை ஸ்ரீ ருத்ரன். பௌர்ணலியன்று சந்திரன் ஆருத்ரா நக்ஷத்திரத்தில் பிரவேசிக்க, சூரியன்
தனுர் ராசியில் பிரகாசிக்கும்போது, விடியற்காலையில்,
பூரண சந்திரன் இருக்கையில், சிவ தரிசனம் செய்வது ஆருத்ரா தரிசனம். வருஷத்தில் அன்றுதான் இரவு நேரம் அதிகம் ,
திருப்பாவை,
திருவெம்பாவை பாசுரங்களை விடியற்காலையில் பாடிக்கொண்டு பக்தர்கள் வீதிவீதியாகச் செல்வதற்குக்
காரணம் இதுதானோ !. ஒலி அதிர்வுகளின் உபயோகத்தை நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.
நமது சடங்குகள், சம்பிரதாயங்கள், வேத விதிகள் யாவற்றிலும் விஞ்ஞானம் புதைந்துள்ளது.
பாவை
நோன்பு செய்யும் முறை
ஆண்டாளின்
பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக்
கூடியவை
நெய்யுண்ணோம்
பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன
செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும்
பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும்
ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
“நெய்
கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத
காரியங்களைச் செய்ய மாட்டோ ம், கோள் சொல்ல மாட்டோம் (குறளை), அதிகாலையில் (நாட்காலே)
குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு
(ஆந்தனையும்) கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை
நோன்பு.”
அதற்காகத்
தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட
சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன. இங்கு தியாகம்
வலியுறுத்தப்படுகிறது. சிறு வயதிலேயே புலன்கள் அடக்கி, ஆண்டாள் சொன்னது
போல, மை இடுதலையும், மலர் சூடுதலையும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் விடுத்து,
நெய் சோறும், பால் சோறும் விரும்பி உண்ணும் அந்தப் பருவத்தில் அவற்றையும் விட்டொழித்து,
இனிய தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு, குளிரையும் பொருட்படுத்தாமல், சில்லிடும் ஆற்று
நீரில் குளித்து நோன்பிருக்கிறார்களே, இதுவே தவம். தேவாதிதேவர்கள் உலாவி வரும் வேளையில்
ஆண்டவனைத் துதித்துப்
பாடுவது
நற்சிந்தனையைத் தரும்.
தவத்தினாலும்,
தியாகத்தினாலும் வரும் பலன்கள் ஸாஸ்வதமானவை; தவிர எது நிரந்தர சுகமோ அது கிடைக்கும்.
ஆண்டவனிடம் கலப்பதுவே அழியாத பேரின்பம்.
மார்கழி
மாதம் பௌர்ணமியன்று பாவை நோன்பைத் தொடங்குவர். அன்று திருவாதிரை நட்சத்திரத்தில், நிலவு
பூரணம் அடையும். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும்,
ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணன், திருவாதிரையன்று வணங்கப்படுபவன். அக்கடவுளே
மழை பொழிய அருள்பவன். அதனால், திருவாதிரை நட்சத்திரத்தில், சந்திரனானது முழுமை அடையும்
மார்கழி மாதப் பௌர்ணமியன்று, ஆற்றங்கரைதோறும் ஹோமத்தீ வளர்த்து, ஆதிரையானுக்கு பூசை
செய்து, பாவை நோன்பினைத் துவக்குவர். அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து, சூரியன் அதே
ஆதிரை நட்சத்திரத்தில் நுழையும் போது இருக்கும் கால, நேரம், நாள்,ஹோரை ஆகியவற்றின்
அடிப்படையில், மாரிக்காலம் எப்படி இருக்கும் என்று மீண்டும் கணிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும்.
அதன் அடிப்படையில்தான் என்ன பயிரிடுவது, எப்பொழுது பயிரிடுவது என்று முடிவு செய்வர்.
பாவை நோன்பின் போது, சரிவர பூசனைகள் செய்வதாலும் நேர்த்தியாக நோன்பிருப்பதாலும் வரப்போகும்
மாரிக்காலம் வளமாக இருக்கும் என்பது இந்த நோன்பில் பிணைந்துள்ள கருத்து.
அந்தப்
பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை. ஆண்டாள் கூறும் முறைப்படி,
மார்கழி முழுவதும், ஆற்றங்கரையில் நோன்பிருக்கப்பட்டது. அது தை, மாசி மாதங்களிலும்
தொடர்ந்திருக்கின்றது. பங்குனி நாள் வரை என்று நாச்சியார் திருமொழியில், இரண்டு இடங்களில்
ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மழைத் தொடர்பு வகையில் பார்த்தால், மார்கழி, தை, மாசி, பங்குனி
ஆகிய நான்கு மாதங்களிலும் இருக்கும் மூன்று வகைப்பட்ட இயற்கைச் சூழ்நிலையைப் பொருத்தே,
ஆவணி மாதம் தொடங்கி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை உட்பட நான்கு மாதங்களிலும் மழை
இருக்கும். மார்கழி தொடங்கி நான்கு மாதங்களிலும், என்றெல்லாம் மூவகைச் சூழ்நிலைகள்
நன்றாக இருந்தனவோ, அன்றிலிருந்து 195ஆம் நாள் நல்ல மழை பொழியும். இதன் அடிப்படையில்,
பங்குனி வரை நோன்பு தொடர்ந்திருக்க வேண்டும்.
பிறகு,
பங்குனி உத்திரம் என்னும் பங்குனி மாதப் பௌர்ணமி.
அன்றுதான் காமன் பண்டிகை. காதலர்களை காமதேவன் சேர்த்து வைத்த நாள். அன்றுதான், யார்
காரணமாக காமதேவன் மலர்க்கணை தொடுத்து, அதனால் சிவனால் எரிக்கப்பட்டு, அனங்கன் என்று
‘உருவம் இல்லாதவன்’ என்னும் பெயர் பெற்றானோ, அந்தப் பார்வதி, பரமசிவனை மணந்த நாள்.
அதுவே, ராமன் சீதையை மணந்த நாள். பாற்கடலில் ஸ்ரீதேவி தோன்றிய நாள், அது மட்டுமல்ல,
அந்த நாராயணனையே மணந்த நாள். அரங்கநகர் பெருமான், தாயாரை மணந்த நாளும் அதுவே. அந்தப்
பங்குனி உத்திரப் பெரு விழா ஸ்ரீரங்கத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்திருக்கின்றது
என்று அக நானுறும் பறை சாற்றும் திருநாள். அன்றுதான் ஆண்டாளும், அரங்கனை மணந்தாள்.
அந்நாளே சேர்த்தி – திருமணப் பிணைப்பில் சேர்த்து வைக்கும் நாள் எனப்படுகிறது.
ஹோலிப்
பண்டிகையன்று கொண்டாடப்படும், பங்குனி உத்திரமே பாவை நோன்பின் முடிவு நாள். திருமணப்
பருவத்தில் இருக்கும் கன்னியர் மார்கழியில் இந்த நோன்பை ஆரம்பிக்க, அடுத்த மூன்று மாதத்திற்குள்
அவர்களுக்கு வரன் அமைந்து, பங்குனி உத்திரத்திற்குள் மண வாழ்கை அமைய முன்னேற்பாடுகள்
நடந்து விடும். மார்கழி மாதத்திற்கு அடுத்ததாக வருவது தை மாதம். இதைத்தான் தை பிறந்தால்
வழி பிறக்கும் என்றனர் நம் முன்னோர்.
பாவை
உருவம்
மணலில்
பாவை என்னும் பொம்மை செய்வர் என்று பார்த்தோம். அது என்ன பொம்மை என்று வெளிப்படையாகச்
சொல்லப்படவில்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், காத்தியாயினி என்னும் பெண் தெய்வத்தைப்
பாவையாக வடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் தமிழ் நாட்டில் ஆண்டாள் என்ன செய்திருப்பாள்
?
அந்த
உருவம் கொண்டவனே அவள் கணவனாவான் என்று ஒரு பிரார்த்தனை. இது பிறவி தோறும் பாவை நோன்பு
நோற்பதனால் ஏற்படும் பயனைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. இப்பிறவியில் வரப்போகும் கணவன், முன் பிறவியிலும், இவளுக்குக்
கணவனாக இருந்திருக்கின்றான். இவளது ஆழ் மனதில் பதிந்துள்ள அவன் உருவத்தையே பாவை நோன்பின்போது,
மணலில் பாவையாக வடித்துள்ளாள். அவள் கணவன் அவனே என்று அவள் உறுதியாக அவ்விடத்திலேயே
இருந்ததை, அவள் நோன்பினை ஏற்றுக்கொண்ட ஆற்று நீர் அதை சிதறடிக்காமல் செல்கிறது.
இந்த
வகையில் சிந்திக்கும் போது, ஆண்டாள் வடிவமைத்த பாவை நிச்சயமாக கண்ணன் அல்லது விஷ்ணுவின்
அவதாரங்களாகவோதான் இருந்திருக்கவேண்டும். அவள்
இலக்குமி
தேவியாதலால், மஹாவிஷ்னுவின் பாவையைத்தான் வடித்து வழிபட்டிருக்கவேண்டும். விஷ்ணுவின்
அவதாரங்கள் சில திருப்பாவையில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் கண்ணன் என்றே
பல இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்
கூறும் உலகம் என்று மட்டுமல்லாமல், யமுனைக் கரையிலும், இந்த நோன்பு செய்யப்பட்டது என்பதால்,
இது, மழையை நம்பி இருக்கும் எல்லா இடங்களிலும் பொதுநலம் கருதி, ஆன்மிகமும் இணைத்து
செய்யப்பட்டிருக்க வேண்டும். மழைக்குக் காரணன் இந்திரன். மழையை நம்பி இருக்கும் நிலங்களில்
அவனுக்குப் பெயர் உண்டு. பாகவதத்தில் வரும் ஒரு குறிப்பில், இமயமலைப் பகுதியில் யாரும்
இந்திரனை நம்பி இல்லை. ஊற்று நீரும், பனி உருகிய நீருமே அவர்களுக்குப் போதும் என்று
வருகிறது. அந்த இமயப் பகுதியில் சேடி நாட்டைச் சேர்ந்த புது மணத் தம்பதியர், காமன்
பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, புகார் நகரில் இந்திர விழா காணப் புறப்பட்டனர் என்று சிலப்பதிகாரம்
கூறிகிறது.
பங்குனி
உத்திரத்தில் வரும் காமன் பண்டிகை இமயத்தில் பிரசித்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம்
இல்லை – அது பார்வதியின் பிறந்தகமாக இருக்கவே. தென் கோடியிலும் காமன் பண்டிகை, வட கோடியிலும்
காமன் பண்டிகை. மனமொத்த மண வாழ்க்கையை விரும்பும் மக்கள், பாரதத்தில் எங்கிருந்தாலும்,
காமதேவனைக் குறித்து ஏதேனும் தவமோ நோன்போ இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்திர விழா
என்பது மழையை எதிர் நோக்கி வாழும் தமிழ் பூமியில் நடந்திருக்கின்றது.
இந்திரனுக்கும்
சேடி நாட்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இந்திரக் கொடியை நாராயணனிடமிருந்து இந்திரன் பெற்றுக்
கொள்கிறான். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடியை சேடி நாட்டவரிடம் இந்திரன் கொடுத்ததாக
வராஹா மிஹிரர் கூறுகிறார்.
ஆண்டாளின்
மஹிமை கீழ்கண்ட நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுகிறது.
ஆண்டாளுக்குப்
பின் பிறந்தவர் ஆண்டாளின் அண்ணன் ஆன சம்பவம் இது. மிகவும் சுவையான சம்பவம். வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக்கூடியவர்
ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாக பரப்பியவர். ஆண்டாளின் மீதும்,
அவளின் பாசுரங்களின் மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே
போற்றப்பட்டார்.
ராமானுஜர்
திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,
"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு
நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் எறுதிருவுடையான்
இன்று இவை கொள்ளுங்கொலோ"
நூறு
தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும்,
வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர் செய்து காட்டினார்.
ஒவ்வொரு
க்ஷேத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர் வந்து பெருமானை சேவிக்கவந்தார்.
கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற அழகிய பெண் குரல் ஒன்று
இவரை நோக்கி அழைத்தது. சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. மீண்டும் மீண்டும்
அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க,
அங்கே கருவறையிலிருந்து ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா"
என்று அழைத்தாள்.
பக்தியுடன்
பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் ராமானுஜர்.
தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க வேண்டும். ஏன் அண்ணன் என்று அழைத்தார்? அதற்கு பதிலும்
அவளே சொல்கின்றாள். என் எண்ணத்தை ,நூறு பெரிய
அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல் நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்?
எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன். அண்ணனோடு
பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர்
தாங்கள்தான். ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள். ராமானுஜர் பூரித்து நின்றார்.
ஆண்டாள்
திருப்பாவையின் பாடல்களின் தன்னை ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து
பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள்.
நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தாள்.
அதே
போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ,
பாஷ்யங்கள் பல எழுதிய குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல், ஆண்டாள் எண்ணியது
போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.
நம்பியின்
பெண்ணா? நப்பின்னையா?இதே ராமானுஜர் ஒரு சமயம் ஆண்டாளின் பாடல்களைப் பாடிக்கொண்டே, திருக்கோட்டியூர்
நம்பியின் (இவரும் ஒரு ஆச்சார்யர்தான்) வீட்டிற்குச் சென்றார். கதவு சார்த்தியிருந்தது.
"செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து
திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" என்ற பாடலை பாடிநின்றார்.
பாசுர
ஒலி கேட்டு, வீட்டின் உள்ளேயிருந்த திருக்கோட்டியூர் நம்பியின் பெண்ணாகிய தேவகி, அலங்கார
ஆபரணங்கள் பூண்டு, வளையோசை எழும்ப, கதவைத் திறக்கிறார். ஆண்டாள் பாசுரத்தில் இதே போன்ற
கட்டம் வரும்போது, ஆண்டாளுக்காக கண்ணனின் மனதுக்கினிய நப்பின்னை கதவைத் திறப்பாள்.
அவளை ஆண்டாளும் தோழியரும் பக்தியுடன் சேவிப்பார்கள்.
அதே
போல இந்தப் பாடல் பாடி முடித்ததும், ராமானுஜருக்கு கதவைத் திறந்தது நம்பியின் பெண்
என்று புலனாகாமல், ஆண்டாள் பாசுரங்களில் மூழ்கியிருந்ததால், கதவைத் திறந்த நம்பியின்
பெண் "நப்பின்னையாகவே" கண்ணுக்குத் தெரிந்தாள். உடனே நெடுஞ்சாண்கிடையாக கீழே
விழுந்து நமஸ்கரித்து சேவித்தார். நம்பியின் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் ஒரு
மஹாநுபாவர் நம் காலில் விழ வேண்டும் என்று பதறியபடியே உள்ளே வந்து தந்தையிடம் நடந்ததைச்
சொல்ல, மேதாவிலாசம் கொண்ட அவரும் புன்சிரிப்போடு நடந்ததைப் புரிந்து கொண்டு, அவளிடம்
நிலையை விளக்கினார்.
ஆண்டாள்,
தமிழிலக்கணத்தால்
தமிழை ஆண்டாள்,
பக்தியால்
பரமனை ஆண்டாள்,
நல்வழிகாட்டியதால்
தோழியரை ஆண்டாள்,
ஆழ்வாரை
(தந்தையை) ஆண்டாள்,
பரமனோடு
கூடியதால், அவளை பக்தியால் பரவும் நம் அனைவரையும் ஆண்டாள்.